46 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் என்ன?- நடிகை கௌசல்யாவின் பர்சனல்ஸ்

0
125
- Advertisement -

பிரபல நடிகை கௌசல்யாவின் பர்சனல் லைஃப் குறித்த செய்திகள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளை விட 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் இருந்த நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அதிலும் 90 காலகட்டத்தில் வந்த அனைத்தும் நடிகைகளும் அழகும் திறமையும் கொண்ட நடிகைகளாகவே இருந்தனர். அந்த வகையில் நடிகை கௌசல்யாவும் ஒருவர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. இவர் விஜய், பிரபு தேவா, கார்த்தி, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தமிழில் இவர் முரளி நடிப்பில் வெளியான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு அடுத்த படத்திலேயே நேருக்கு நேர் படம் மூலம் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

கௌசல்யா திரைப்பயணம்:

மேலும், விஜய்யுடன் பிரியமுடன் படத்திலும் நாயகியாக கௌசல்யா நடித்தார். பின்னர் அதே விஜய்யுடன் ரீ – என்ட்ரிக்கு பிறகு ‘திருமலை’ படத்தில் ரகுவரன் மனைவியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான வேடத்தில் நடித்தது கிடையாது. இடையில் சில ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இடையில் கௌசல்யாவின் வாழ்க்கையில் கூட பல சிக்கல்கள் உண்டாச்சு.

சினிமாவில் ரீ – என்ட்ரி:

குறிப்பாக, நரம்பு சம்பந்தமான பிரச்சினை அல்ல கௌவுசல்யா பதிக்கப்பட்டு இருந்தாங்க. மருந்துகளின் பக்க விளைவுகளால இவங்களோட உடல் எடை ரொம்பவே அதிகம் ஆச்சு. இதன் காரணமாக சினிமாவில் இருந்து சில காலம் பிரேக் எடுத்தாங்க. அதுக்கப்புறமா, உடல் எடையைப் பழையபடி குறைச்சாங்க. மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு நடிக்க கௌசல்யா நடிக்க வந்தாங்க. அப்படி கௌசல்யா கம்பேர் கொடுத்த படம் தான் ‘திருமலை’. சமீப காலமாக மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

கௌசல்யா திருமணம் சர்ச்சை:

இவருக்கு தற்போது 46 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். ஒருமுறை அதுக்கான காரணத்தை கௌசல்யா ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அதில், ‘சினிமால பிஸியா இருந்தப்போ, நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில இருந்தேன். ஆனா, சில காரணங்களால அது கல்யாணத்துல முடியல’ என்று வெளிப்படையாக கூறியிருந்தார். கூடவே, குடும்பம் குழந்தைங்கற பெரிய பொறுப்பை என்னால சிறப்பாக கையாள முடியுமான்னு தெரியல. இப்போ வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.

கௌசல்யாவின் அம்மா:

மேலும், நடிகை கௌசல்யாவுக்கு அவரின் அம்மா என்றால் உயிர். அதே மாதிரி தனது அப்பா, அண்ணன், அண்ணி, அண்ணன் மகள் என குடும்பத்தினருடன் தற்போது பெங்களூரில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகிறார். ஒருமுறை கௌசல்யாவின் அம்மா, ‘என் மகள் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது எனக்கு மிகுந்த மனவலியைக் கொடுத்தாலும், மகளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரு போதும் கட்டாயப்படுத்த மாட்டேன். அதே சமயம், என் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்’ என்று கூறியிருந்தார்.

Advertisement