தன் பட இயக்குனரின் மச்சானையே மாப்பிள்ளையாக மாற்றிய கயல் ஆனந்தி – ஒரு வேல லவ்வோ ?

0
2470
kayal
- Advertisement -

இந்த லாக்டவுன் சமயத்தில் பல்வேறு நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் திருமணத்தை முடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான கயல் ஆனந்தி திடீர் திருமணம் முடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.

-விளம்பரம்-
kayal-anandhi-got-married

இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் நடிகை ஆனந்தி நடிப்பில் வெளிவந்த படம் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கினார். அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

 தமிழில் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’, ‘இராவணக் கோட்டம்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆனந்தி. இறுதியாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ படத்தில் நடித்திருந்தார்.  தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’, ‘இராவணக் கோட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கயல் ஆனந்தி திடீர் திருமணம் செய்துள்ளார்.  நேற்று (ஜனவரி 7 ) இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது.

Moodar Koodam Naveen Sudden Marriage

மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஒரு வேலை ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் கயல் ஆனந்தி நடித்த போது சாக்ரடீஸ் மற்றும் இவருக்கும் காதல் ஏற்பட்டதாக என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement