தெலுங்கில் இதுவரை இல்லாத ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ள ஆனந்தி – 5 மில்லியன் வியூஸ் கடந்து செல்லும் வீடியோ.

0
100704
anandhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.

-விளம்பரம்-

நடிகை ஆனந்தி இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய 3 மொழிகளில் நடித்து உள்ளார். ஆனால், இதுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாகவோ, மோசமான காட்சிகளிலோ நடித்து இல்லை. இப்படி ஒரு நிலையில் இவர் தெலுங்கில் ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : பிரபல 90ஸ் நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம் – சினிமாவே வேண்டாம்னு இந்த தொழில் தான் செஞ்சிட்டு இருந்தார்.

- Advertisement -

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் கயல் ஆனந்தி தெலுங்கில் இப்படி ஒரு கவர்ச்சி நடிகையா என யோசிக்கும் அளவுக்கு அந்த பட நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார். இதனாலேயே அந்த ட்ரெய்லர் ஒரே நாளில் மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தற்போது வரை இந்த ட்ரைலர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

நடிகை ஆனந்திக்கு கடந்த ஜனவரி மாதம் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 4 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement