நினைவிருக்கும் வரை நடிகையா இவங்க ? இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே

0
11215
Ninaivirukkum-Varai

1999ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த படம் நினைவிருக்கும் வரை. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி ரெட்டி.

actress-Keerthi-Reddy

கீர்த்தி ரெட்டி 1978ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு இன்டீரியர் டிசைனர், அம்மா ஒரு பேஷன் டிசைனர் மேலும், கீர்த்தி ரெட்டியின் தாத்தா ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

இப்படி ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை வெங்களூரிலும், கலோரி படிப்பை அமெரிக்காவிலும் முடித்தார். தனது 18 வயதில் ‘கன்ஷாட்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

actress-Keerthi-Reddy-now

அதன்பின்னர் 1998ஆம் ஆண்டு தமிழில் ஜாலி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் இனியவளே, நினைவிருக்கும்வரை ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் கீர்த்தி. மேலும், ஹிந்தியில் அபிஷேக் பச்சனுடன் ஒரு படம் நடித்தார்.

அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு தனது 26 வயதில் சுமந்த் என்ற தெலுங்கு நடிகை திருமணம் செய்துகொண்டார். சுமந்த்திற்கு நாகார்ஜுனா மாமன் முறையாவர். திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2006ல் சுமந்த்திடம் இருந்து விவாகரத்து பெற்றார் கீர்த்தி.

Keerthi-Reddy

அதன்பின்னர் அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் தன்னுடைய நண்பரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது.