5 நிமிடம் வெளியில் சென்றதால் அவஸ்தை படுகிறேன்.ஷாக் கொடுத்த நடிகை கிரண்.

0
2758
kiran

ஒட்டுமொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் 834 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 19 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் போராடி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பல பிரபலங்களுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் பிரபல நடிகை கிரண் அவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதாக அவரே சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை கிரண் அவர்கள் ஐந்து நிமிடம் வெளியில் சென்றதால் எனது உடல் நிலை மோசமாக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஹலோ நண்பர்களே, எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? தயவு செய்து யாரும் வெளியில் செல்லாதீர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

வீட்டில் போர் அடிக்குது என்று நான் வெளியில் ஒரு 5 நிமிடம் வாக்கிங் சென்றேன். அதனால் எனக்கு சளி, அதிக காய்ச்சலாக உள்ளது. இதற்கான காரணம் எனக்கு என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை காலநிலை மாற்றங்களினால் இந்த மாதிரி ஏற்படுகிறதா? என்றும் புரியவில்லை. நான் வெளியே கொஞ்ச நேரம் நடந்தேன்.

-விளம்பரம்-

ஒரு வேலை கொரோனாவாக இருக்குமா? ஆனால், இதெல்லாம் இருக்காது என்று நினைக்கிறேன். ஆகவே மக்களே ப்ளீஸ் யாரும் தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள். கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தயவு செய்து அரசாங்கம் சொல்வதை கேட்டு இந்த இருபது நாட்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இது எனக்கு airborne disease தான். நான் கூடிய விரைவில் குணம் ஆகி விடுவேன். அதனால் யாரும் வெளியில் போகாதீர்கள். என்னை பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கிரண். அதன் பின்னர் கமல்ஹாசன், பிரசாந்த்,விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெங்கட் ராகவன் இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளிவந்த முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement