உங்க கணவர் என்ன சொன்னார் – குஷ்பூவை திருமணம் செய்துகொள்ள மீண்டும் கேட்ட நபர். குஷ்பூவின் பதில்.

0
5981
kushboo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-171-1024x606.jpg

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோக்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வாய் அடைத்து போய் உள்ளார்கள். ஆமாங்க, நடிகை குஷ்பூ படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

இதையும் பாருங்க : ரக்‌ஷா பந்தனில் ஷாக் கொடுத்த ஷிவானி – பாலாஜி. என்னப்பா Shivubala Fans இப்படி ஆகிடிச்சி.

- Advertisement -

அந்த புகைப்படத்தை சமீபத்தில் அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் தான் குஷ்பூவின் இரண்டு மகள்களும் உடல் எடையை குறைத்து பலரையும் வியப்படைய செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது தனது மகள்களை விட படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் குஷ்பூ. இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் குஷ்பூவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி கமன்ட் செய்தார்.

இதற்கு பதில் அளித்த குஷ்பூ, சாரி, நீங்க ரொம்ப லேட். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு 21 வருட தாமதம். இருந்தாலும் என் கணவரிடம் இதுபற்றி கேட்கிறேன் என்று மிகவும் கூலாக பதில் அளித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் கமன்ட் போட்ட அந்த ரசிகர் உங்க கணவர் கிட்ட இருந்து எதாவது பதில் வந்துச்சா என்று கேட்டு இருந்தார். அதற்கு குஷ்பு, எதிர்பாராத விதமாக நான் மட்டும் தான் அவரின் ஒரே மனைவி. அதனால் அவர் என்னை விட்டுகொடுக்க மாட்டேன் சாரினு சொல்லிட்டாரு என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement