காலில் கட்டுப்போட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை குஷ்பூ, என்னாச்சு? அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
443
- Advertisement -

நடிகை குஷ்பூ காலில் பெரிதாக கட்டு போட்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கி இருந்தார். மேலும், சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. அதோடு ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். பின் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

குஷ்பூ திரைப்பயணம்:

அதுவும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிளும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதனிடையே குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய இரண்டு மகள்களும் படித்து முடித்து விட்டு தங்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

குஷ்பூ மகள்கள்:

அதிலும் குஷ்பு உடைய மூத்த மகள் அவந்திகா சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்திருக்கிறார். இவர் விரைவிலேயே ஹீரோயினியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இரண்டாவது மகள் அனந்திகா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும், குஷ்பூ அவர்கள் நடிப்பு மீது கவனம் செலுத்தி வந்தாலும், அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

குஷ்பூ அரசியல்:

தற்போது இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். இவர் எப்போதுமே சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பூ பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இவருடைய காலில் மிகப்பெரிய கட்டு போட்டு இருக்கும் புகைப்படத்தை தான் வெளியிட்டு இருக்கிறார்.

குஷ்பூ பதிவு:

அதில் தொடையில் இருந்து கீழ் கால் வரை நீட்டாக பெல்ட் போடப்பட்டிருக்கிறது. பின் இது தொடர்பாக பதிவில் குஷ்பூ, ‘நான் மற்றும் என்னுடைய பெஸ்டி’ மிகச்சிறந்த காம்போ என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், எப்படி அடிபட்டது? என்ன ஆனது? நீங்கள் கூடிய நீங்கள் சீக்கிரமாகவே குணமடைந்து வர வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் போட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Advertisement