உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 12,35,295 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 67,187 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் இந்தியாவில் 3,577 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 83 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

Advertisement

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், தினகூலி நம்பி வாழும் மக்கள்களுக்கு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : எல்லாரும் சோர் இல்லாமல் கஷ்டபடறாங்க,இதான் முக்கியமா ? விளம்பரம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்.

இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள். இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதியே பல்வேறு படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுளள்து .சினிமா ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா நடிகர்களுக்கு உதவி கோரியுள்ளது.

Advertisement

கொரோனாவால் வேலையிழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி அளித்திருந்தனர். ரஜினி 50 லட்சம் ரூபாயும், கமல் 10 லட்ச ரூபாயும்,விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், சூர்யா-கார்த்தி குடும்பம் 10 லட்சம் ரூபாயும் வழங்கினர். அது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் அரிசி மூட்டைகளை அனுப்பி இருந்தனர்.

Advertisement

ஆனால், நடிகர் சங்கம் தற்போது மிகுந்த பிரச்சனையை சந்தித்து கொண்டு வருகிறது கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலுக்குப் பின் நடிகர் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துகொண்டு வருகிறது. இதனால் தற்போது நடிகர் சங்கம் தனி அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நடிகர் சங்க அறக்கட்டளை அவசர காலத்தில் நலிந்த கலைஞர்களுக்கு வழங்க கூட பணம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.


இதையும் பாருங்க : ஊரடங்கையும் மீறி இரவில் ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றிய நடிகைக்கு ஏற்பட்ட விபத்து. தற்போது அவரின் நிலை ?

இந்த நிலையில் பிரபல நடிகையான குட்டி பத்மினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வரும் நலிந்த கலைஞர்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் கூட 25 லட்சமாவது தேவை படும் ஐசரி கணேஷ் 10 லட்சம் மற்றும் நடிகர் கார்த்தி 2 லட்சம் கொடுத்தனர். மற்றவர்கள் அவரவர் கையில் உள்ள 1000, 2000 என தந்தனர். மேலும் சங்கீதா, உதயா போன்றோர் கொடுத்த பணத்தில் அரிசி போன்றவை வாங்கி கொடுத்தோம். எனவே, ரஜினி, விஜய், கமல், அஜித் போன்றவர்கள் தற்போது நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டும் என கேட்டுள்ளார்.


Advertisement