ஊரடங்கையும் மீறி இரவில் ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றிய நடிகைக்கு ஏற்பட்ட விபத்து. தற்போது அவரின் நிலை ?

0
6829
sharmila
- Advertisement -

தென்னிந்திய மொழி படங்களில் மிக பரிச்சயமான நடிகை ஷர்மிளா மன்றே. கன்னட சினிமாவில் அரை நூற்றாண்டு காலம் தயாரிப்பாளராக கோலோச்சிய ஆர்.என்.மந்த்ரேவின் பேத்தி தான் நடிகை ஷர்மிளா மன்றே. கன்னடத்தில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஷாஜினி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு நடிகையாக அறிமுகமானார் ஷர்மிளா மன்றே. இதனை தொடர்ந்து இவர் சுயம்வரா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்து உள்ளார். பின் இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மிரட்டல் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஆனால், மிரட்டல் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கொடுக்கவில்லை. பின் இவர் மீண்டும் கன்னட மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

-விளம்பரம்-
Mirattal Movie (2012) | Reviews, Cast & Release Date in Chennai ...

- Advertisement -

இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து உள்ளார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு’ஆகிய பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தமிழில் நயன்தாரா நடித்த மாயா படத்தின் கன்னட ரீமேக்கில் 2017ஆம் ஆண்டு ஷர்மிளா நடித்தார். அதன் பிறகு இவர் கன்னடம் மொழி படங்களில் மட்டும் நடித்துக் கொண்டு வந்தார்.

இதையும் பாருங்க : ‘‘கில்லி படம் முதலில் இந்த நடிகருக்கு தான் சென்றது, அதே போல தூள் படத்தில்’ – ஒளிப்பதிவாளர் சொன்ன சீக்ரெட்.

தற்போது இவர் கன்னடம், தமிழ் மொழி படங்களை தயாரித்து வருகிறார். தமிழில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, சண்டக்காரி, நானும் சிங்கிள் தான் ஆகிய படங்களை தயாரித்தார். இந்நிலையில் ஷர்மிளா மன்றே அவர்கள் சென்ற கார் விபத்துக்குள் ஆகி உள்ளது. தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. நடிகை ஷர்மிளா மன்றே அவர்கள் பெங்களூரில் தான் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-
Mirattal Movie: Watch Full Movie Online on Jiocinema

இவர் சில தினங்களுக்கு முன்பு இரவில் தன் ஆண் நண்பர்கள் உடன் தனது சொகுசு கார் ஜாகுவார் வெளியில் சென்று உள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் எந்த இடத்திலும் டிராபிக் எதுவும் இல்லாததால் படு வேகமாக காரை ஓட்டிச் சென்று உள்ளார். அதிகாலை 3 மணி அளவில் பெங்களூர் வசந்த் நகர் ரயில்வே பாலத்தில் கார் சென்ற போது நிலை தடுமாறி உள்ளது.

இதையும் பாருங்க : புத்தகத்திற்கு மரியாதை கொடுங்க. அஜித் பட நடிகை வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

பின் அங்கிருந்த பாலத்தின் தூணில் மோதி கார் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் நடுங்கி ஷர்மிளாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவரது நண்பர்களுக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை கன்னிங்ஹாம் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான போர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஷர்மிளா காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. விசாரணையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆண் நண்பருடன் காரில் நடிகை ஷர்மிளா காரில் ஊர் சுற்றியதாக தெரிகிறது. காவல்துறையின் அனுமதி கடிதம் இல்லாமல் காரில் வெளியில் சென்றது எதற்காக? காரை ஓட்டியது யார்? போதையில் கார் ஓட்டபட்டதா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடிகை ஷர்மிளா தனது ஆண் நண்பருடன் பயங்கர வேகத்தில் காரில் சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

Advertisement