கோலிவுட் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. விஜயகாந்த்தின் நடிப்பில் வெளியான ‘கள்ளழகர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் மொழியில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ரோஜாவனம், தில், தீனா, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, கம்பீரம், பரமசிவன், திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே இந்தி, தெலுங்கு, உருது, மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். இவர் சினிமா துறையில் முதன் முறையில் அறிமுகமானது இந்தியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான துஷ்மன் துனியா கா என்ற படத்தின் மூலம் தான்.

அதற்கு பின் தான் இவர் விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் உன்னை நினைத்து படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் இருந்து விஜய் விலகி விட சூர்யா தான் கதாநாயகனாக நடித்தார். ஆகவே விஜய் தான் என்னிடம் இருந்து தப்பிய ஒரே நபர் என்று சமீபத்தில் பேட்டியில் நடிகை லைலா கிண்டலாக தெரிவித்திருந்தார். இறுதியாக ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்று இருந்தார் நடிகை லைலா.

இதையும் பாருங்க : விவாகரத்து ஆகி 10 வயது மகன் இருக்கும் நடிகருடன் நிச்சயம் செய்த பாக்கியலட்சுமி ஜெனி – உண்மை தெரிந்ததால் தான் திருமணத்தை நிறுத்தினார் ?

Advertisement

ரீ-என்ட்ரி கொடுக்கும் லைலா:

பின் எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 ஆம் ஆண்டு லைலா தான் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். மேலும், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த லைலா 16 ஆண்டுகளுக்கு பிறகு re-entry கொடுக்க தயாராக இருக்கிறார். தற்போது நடிகர் கார்த்திக் நடித்து வரும் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் லைலா நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் லைலா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, சென்னை என் மனதுக்கு நெருக்கமான ஊர்.

லைலா அளித்த பேட்டி:

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் இங்கே தான் இருக்கிறார்கள். அதனால் இத்தனை வருஷமாக நான் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி வந்து தோழிகளோடு நேரம் செலவிட்டு தான் செல்வேன். நான் வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். படிப்பில் அவரெஜ் தான். ஆனால், விளையாட்டில் ஆர்வம் அதிகம். பள்ளி படிக்கும்போதே அடிக்கடி கிளாஸ் கட் அடித்துவிட்டு கிரவுண்டில் சுற்றிக் கொண்டிருப்பேன். சினிமாவில் நடிக்கணும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. பாலிவுட் காமெடி நடிகர் தான் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கிளாமர் டிரஸ் செட்டாகவில்லை.

Advertisement

படப்பிடிப்பில் நடந்த விபத்து:

அதனால் தான் நான் ஹோம்லி ரோலில் நடித்தேன். அதனால் சில பட வாய்ப்புகளையும் தவிர்த்திருக்கிறேன். என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படம் என்றால் Naa Hrudayamlo Nidurinche Cheli தெலுங்கு படம். அந்த படத்தில் நான் கேக் கட் பண்ணற மாதிரி ஒரு சீன் வரும். அப்போ ஹீலியம் பலூன் வெடிக்க வைக்கும் திட்டம் போட்டு இருந்தார்கள். எதிர்பாராத வகையில் பயங்கர சத்தத்துடன் அந்த பலூன் வெடித்ததில் எப்படியோ காயமில்லாமல் தப்பித்தேன். ஆனால், அந்த விபத்தில் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சுலபமாக கடந்து போக முடியவில்லை. அதற்கு பிறகு கொஞ்ச நாளுக்கு சூட்டிங்கில் நான் கலந்து கொள்ளவில்லை. என்னை சமாதானப்படுத்தி பிறகு தான் மறுபடியும் நடித்துக் கொடுத்தேன்.

Advertisement

படங்களில் நடிக்கும் ரோல் குறித்து லைலா சொன்னது:

அந்த சம்பவத்தை நினைத்தால் இப்போது கூட பயமாக இருக்கிறது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதா தான் எனக்கு ரெகுலராக குரல் கொடுத்தார்கள். ஆனால், பிதாமகன் படத்தில் சில காட்சிகளில் நானே வாய்ஸ் கொடுத்திருக்கிறேன். நான் ஜோடியாக நடித்த ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், இப்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கு அக்கா,அண்ணியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஹோம்லி, ஹியூமர் ரோல்களில் தான் அதிகமாக நடித்து இருக்கேன். அப்படி நடிக்கிறது தான் எனக்கு பிடிக்கும். சஸ்பென்ஸ், திகில், வில்லி மாதிரி உள்ள ரோலில் நடிக்கணும் என்று எனக்கு ரொம்பவே ஆசை. அப்படியான கதை வந்தால் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement