விவாகரத்து ஆகி 10 வயது மகன் இருக்கும் நடிகருடன் நிச்சயம் செய்த பாக்கியலட்சுமி ஜெனி – உண்மை தெரிந்ததால் தான் திருமணத்தை நிறுத்தினார் ?

0
930
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாகயலக்ஷ்மி தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். அதன் பின்னர் லட்சுமி வந்துச்சி, சுமங்கலி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடர் மூலம் அறிமுகமானார். இவருக்கும் பிரபல நடிகருமான ஆர் கே சுரேஷுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இவர்கள் திருமணம் நடைபெறாமல் போனது பற்றி தெரியுமா.

-விளம்பரம்-

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர் கே சுரேஷ் மற்றும் திவ்யா இருவரும் பிரஸ் மீட் ஒன்றை வைத்து விரைவில் தாங்கள் திருமணம் செய்துகொள்வதாக கூறி இருந்தார்கள். இவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் இவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களது திருமணம் நடைபெறாமல் போனது. இது குறித்து பேசிய திவ்யா அவர் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது.

இதையும் பாருங்க : நல்லா தான இருந்தாங்க ஏன் இப்படி ? யாருனு தெரியுதா ? 2k கிட்ஸ் பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.

- Advertisement -

திவ்யா கணேஷ் சொன்ன காரணம் :

மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை பெரிதாகி வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம். பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆர் கே சுரேஷ் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது குறித்து கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அதில் ‘நான் ஒரு சிங்கிள் பேரண்ட் என்கிற விஷயம் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்களுக்கும், சினிமா துறையை சேர்ந்த சிலருக்கு மட்டும் தான் தெரியும்.என்னுடைய மகன் பெயர் கவின். அவனுக்கு தற்போது பதினோரு வயது ஆகிறது. நானும் என் மனைவியும் 4 வருடங்களுக்கு முன்னாடியே பிரிந்துவிட்டோம். என்னுடைய மகன் கவின் அவன் அம்மா உடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

-விளம்பரம்-

மனைவியை பிரிய காரணம் :

நானும் கவினும் அடிக்கடி சந்திப்போம். ஆனால், அதற்கு அவங்க அம்மா எந்த ஒரு தடையும் சொல்லமாட்டார்கள். அவள் ரொம்ப தைரியமான பொண்ணு, நல்ல குணம் கொண்டவள். என்னோட பயனை நல்ல முறையில் வளர்த்து கொண்டு வருகிறார். ஒரு குடும்ப உறவு என்பது கணவன் மனைவி இரண்டு பேரும் விட்டுக் கொடுத்து வாழ்வது தான்.குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வரப் போகிறது என்றால் அதை இரண்டு பேருமே சரியாக பேலன்ஸ் பண்ணிட்டா போதும் குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக போகலாம். அது மட்டுமில்லாமல் சினிமாவில் இருக்கிற கணவன் மனைவி என்றால் அவர்களுக்கு இடையே புரிதல் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும்.

இரண்டாம் மனைவியுடன் ஆர் கே சுரேஷ்

உதவி தேவைப்பட்டால் கூட நான் பண்ணுவேன் :

மேலும், நாங்கள் இரண்டு பேருமே அன்பாக, பாசமாக கவின் மீது இருப்போம். எங்களுடைய விவாகரத்துக்குப் பிறகு நாங்கள் 2 பேருமே நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் அங்கே முதலாக போய் நிற்பேன். அவங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூட நான் பண்ணுவேன். நாங்கள் ரெண்டு பேரும் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டாலும் எங்கள் நட்பு அப்படியே தான் இருக்கும் என்று கூறி இருந்தார். ஒருவேலை ஆர் கே சுரேஷ், தனக்கு குழந்தை இருப்பதை மறைத்தால் தான் திவ்யா கணேஷ் தனது திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement