அப்போ சூர்யா, இப்போ கார்த்தி. 16 ஆண்டுகளுக்கு பிண மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை – (இவங்கள பிடிக்காதவங்க இருப்பாங்களா ? )

0
1054
Laila
- Advertisement -

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லைலா. 90 கால கட்டத்தில் தன் சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஹீரோயினி லைலா. இவர் 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கு, உருது, மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா துறையில் முதன் முறையில் அறிமுகமானது இந்தியில் தான். கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான துஷ்மன் துனியா கா என்ற படத்தின் மூலம் தான். அதற்கு பிற இவர் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
laila

இவர் நடித்த தில், தீனா, மௌனம் பேசியதே, பிதாமகன் போன்ற பல திரைப்படங்கள் ஹிட் ஹிட் கொடுத்து இருக்கிறது. பின் லைலா தமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து இருந்தார். அதற்கு பின் இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். மேலும், இவர் விஜய்யுடன் உன்னை நினைத்து படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் இருந்து விஜய் விலகி விட பின்னர் சூர்யா தான் கதாநாயகனாக நடித்தார். விஜய் தான் என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ என்று சமீபத்தில் பேட்டியில் நடிகை லைலா கிண்டலாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

லைலாவின் திரைப்பயணம்:

கடைசியாக இவர் 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். பிறகு லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை லைலா அவர்கள் தான் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

laila

சினிமாவில் லைலா நடிக்காமல் இருந்த காரணம்:

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட லலைலா என்னவானார் என்று சில காலம் தெரியாமல் இருந்தது. பிறகு சில வருடத்திற்கு முன் இவர் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று இருந்தார். இந்நிலையில் லைலா மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. 16 ஆண்டிற்கு பிறகு லைலா அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அதுவும் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியிருந்தார்.

-விளம்பரம்-

ரீ-என்ட்ரி கொடுக்கும் லைலா:

பின் தனிப்பட்ட காரணங்களால் சிம்ரன் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். தற்போது அவருக்கு பதிலாக லைலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் தான் சர்தார் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ‘சிறுத்தை’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் தான் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார். இவர்களுடன் ரஜிஷா விஜயன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சர்தார் படம் பற்றிய தகவல்:

பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் லக்ஷ்மன் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இந்த படம் கிரைம் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே லைலா அவர்கள் சூர்யாவுடன் சேர்ந்து உன்னை நினைத்து என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் லைலா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement