ஜோதிகா காதலுக்கு நானும் உதவி செஞ்சிருக்கேன் – சூர்யாவுடன் மூன்று படத்தில் நடித்த நடிகை பேட்டி.

0
32085
suryajyo
- Advertisement -

கோலிவுட் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் லைலா. விஜயகாந்த்தின் நடிப்பில் வெளியான ‘கள்ளழகர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ரோஜாவனம், தில், தீனா, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, கம்பீரம், பரமசிவன், திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை லைலா அவர்கள் தமிழில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜயகாந்த், பிரசாந்த், சரத்குமார் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Jyothika: Suriya

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார். மேலும், இவர் ரசிகர்களுக்கு பிடித்த அழகிய லைலாவாக வலம் வந்தார். பின்னர் 2006ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழில் அதிபரான மொஹ்தீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். பின் தன் குடும்பத்துடன் ஐக்கியமானார். தற்போது இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை லைலா அவர்கள் சமீபத்தில் வீடியோ கால் மூலம் நேர்காணல் ஒன்று கொடுத்துள்ளார். அதில் தொகுப்பாளர் நீங்கள் ஜோதிகா– சூர்யா இருவர் உடனுமே நடித்து உள்ளார்கள். இவர்கள் காதல் குறித்துக் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு லைலா அவர்கள் கூறியது, எனக்கு சூர்யா, ஜோதிகா காதலிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தெரியும். இரண்டு பேருமே எனக்கு நல்ல நண்பர்கள். ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது சூர்யா போனில் ஜோதிகாவுடன் பேசிக் கொண்டிருந்தார். சூர்யா அவர்கள் என்னிடம் நான் போகணும், நான் ஒருவர் கிட்ட பேசணும் என்று சொல்லியிருந்தார். நாங்கள் யார் இந்த ஆளு? எனக்கு யார் என்று தெரியும் என்று நான் சொன்னேன்.

-விளம்பரம்-

அதற்கு சூர்யா அவர்கள் எனக்கு அவளை ரொம்ப பிடித்து இருக்கு. உடனே நான் யாரு அவங்க என்று கேட்டேன். அதற்கு சூர்யா அவர்கள் ஜோதிகா என்று சொன்னார். எனக்கு ஒரே ஷாக். பின் நான் ஓகே ஜோதிகாவா சூப்பர் என்று சொன்னேன். ஜோதிகா வீட்டில் முதலில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் எப்படியே இரு வீட்டாரும் பேசி நல்லபடியாக அவர்கள் திருமணம் முடிந்தது. அவங்களுடைய காதலுக்கு நானும் உதவி செஞ்சிருக்கேன்.

surya laila

இதெல்லாம் கேட்டாங்கன்னா சூர்யாவும் ஜோதிகாவும் என்னை கொன்னுடுவாங்க என்று கூறினார். இப்படி லைலா கூறிய வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. இவர் நடிகர் சூர்யா உடன் இணைந்து உன்னை நினைத்து, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது நடிகை லைலா அவர்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகிறார்.

Advertisement