கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்த படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து பெரும்புகழ் பெற்றவர் நடிகை லட்சுமி. இந்த படத்திற்கு முன்னர் பல நூறு படங்கள் நடித்துள்ளார் லட்சுமி.

Advertisement

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் லட்சுமி. பல பிலிம்பேர் விருதுகள், பல கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசின் விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றாலும், அவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகமானதாகவே அமைந்துள்ளது

தனது 19 வயதில் 1969ல் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 1971ஆம் ஆண்டு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா.

Advertisement

Advertisement

ஆறு படத்தில் ரவுடி பொம்பளை கேரக்டரில் நடித்து, மேடையில் ஏறி அரசியவாதிகளை அழகான சென்னை பாஷையில் திட்டுவார் ஐஸ்வர்யா. அந்த ஐஸ்வர்யா லட்சுமியின் மகள்தான்.

பின்னர் 1974ல் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற லட்சுமி, 1985ல் மோகன் சர்மா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். இந்த வாழ்கையும் இவருக்கு கசந்துபோக 5 வருடத்தில் இவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ் சிவா சந்திரனுடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மீண்டும் மீண்டும் விவாகரத்து பெற்று தற்போது 67 வயதில் தன் இரண்டு மகள்களுடம் அமைதியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வசித்து வருகிறார்.

Advertisement