ரஜினியின் மகள்களை தனது மருமகளாக ஆசைப்பட்ட நடிகர் – அவரது பொண்ணு தான் இந்த நடிகை.

0
51008
rajini
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இறுதியாக இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் என்று பலர் நடித்து வருகின்றனர். அந்த வகையில் புகைப்படத்தில் ரஜினியுடன் இருக்கும் இந்த நடிகை பெயர் லட்சுமி மஞ்சு.

-விளம்பரம்-

தமிழ் ரசிகர்கள் சிலருக்கும் இவரை தெரிந்திருக்கவும் வாய்ப்பிறக்குகிறது. இவர் 2008 ஆம் ‘The Ode’ என்ற ஆங்கில திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில ஆங்கில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்கத்துவங்கினார். மேலும், கடல் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இவரும் ஒரு வாரிசு நடிகை தான்.

- Advertisement -

ஆம், பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபுவின் மகள் தான் இவர். ரஜினியும், மோகன் பாபுவும் வாடா போடா நண்பர்கள். ரஜினி விரும்பி செல்லும் வீடுகளில் ஒன்று மோகன் பாபுவினுடையது. மோகன் பாபுக்கு இரு மகன்கள், ஒரு மகள். ரஜினியின் மகள்களில் ஒருவரை தனது மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மோகன் பாபுக்கு இருந்தது. அதேபோல் ரஜினிக்கும். ஆனால், அது நடக்கவில்லை.

அண்ணாத்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த அரங்கில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பயோ-பபுள் முறையில் கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் நடைபெற்றது. அண்ணாத்தே படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினியுடன் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்து, அதனை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement