தமிழ் சினிமாவில் இருந்த 80ஸ் காலகட்ட நடிகைகளை தற்போதும் மறக்க முடியாது. அந்த வகையில் 80ஸ் கால கட்டத்தில் இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை மாதாவி. 80 மற்றும் 90களில் வெளிவந்த தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மாதவி. ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான படங்களில் நடித்தவர் மாதவி.நடிகை மாதவி 1962ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் அல்லதுர்கம் மாதவி. சிறு வயதில் நாட்டிய கலையில் கைதேர்ந்தவர் இவர். கிட்டத்தட்ட 1000 மேடையில் தனது நாட்டிய திறமையை காட்டியுள்ளார்.
அதன் பின்னர் தனது டீன் ஏஜில் தூரப்பு படமரா என்ற ஒரு தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் செம்ம ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் தனது சிறு வயதிலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் மட்டுமே 10 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.1981ல் ரஜினிகாந்தின் தில்லு முள்ளு படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால், விடுதலை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஹிந்தியில் அமிதாப் பச்சனுடனும் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் ,ஒரியா என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி. அந்த காலகட்டத்திலேயே பிகினி காட்சிகளில் தயங்காமல் நடித்த முன்னணி நடிகைகளில் மாதவியும் ஒருவர்.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பரந்த நடிகை மாதவி பின்னர் பாலிவுட் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கினார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் உச்சத்தில் இருந்த மாதவிக்கு வயதும் ஏறியது, பின் படங்களும் தொடர்ந்து பிளாப் ஆனது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த மாதவி, தனது தோழரான ரஜினியிடம் ஆலோசனை கேட்க ரஜினியோ இமய மலையில் இருக்கும் தன் குரு ஒருவரை சென்று பார்க்க சொல்லி இருக்கிறார்.
மாதாவி இமய மலை சென்று அவரை பார்க்க, அந்த குருவோ மாதவியை திருமணம் செய்துகொள்ள அருவுறுத்துகிறார். அதுவும் அங்கே வந்த ஒரு வெளிநாட்டு பக்தரை திருமணம் செய்துகொள்ள அந்த குரு கூறியுள்ளார். அமெரிக்காவில் தொழிலில் நஷ்டமாடைந்த அந்த நபரை மாதவி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இனி 30 ஆண்டுகள் உன்னால் இந்தியாவிற்கு வர முடியாது என்று அந்த குரு சொல்லியுள்ளார்.
மாதவி முதலில் இதை நம்பவில்லை. ஆனால், அவர் சொன்னது போலவே நடந்து உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கணவரின் தொழிலும் நன்றாக சென்றுள்ளது. மாதவிக்கு மூன்று மகளும் பிறந்துள்ளது. அதே போல திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு திரும்பாத மாதவி அமெரிக்காவிலேயே தொழிலையும் குடும்பத்தையும் கவனித்து வருகிறார். ஆனால், இன்றும் ரஜினியுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறாராம் மாதவி.