‘அசிங்கமா போச்சு, இனி இந்தியாவே வரமாட்டேன்’ – இயக்குனர் வெளியிட்ட தன்னுடைய புகைப்படத்தால் புலம்பிய மஹிமா.

0
431
mahima
- Advertisement -

அசிங்கமா போச்சு, இந்தியாவே வரமாட்டேன்! என்று நடிகை மகிமா நம்பியார் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் மஹிமா நம்பியார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் தனது 15 வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு இவர் தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மஹிமா நம்பியார். சாட்டை படத்திற்கு பின்னர் இவர் மொசக்குட்டி, குற்றம் 23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

மகிமா நம்பி திரைப்பயணம்:

மேலும், ரவி அரசு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அயங்கரன் படத்தில் மஹிமா நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. தற்போது இவர் சமுத்திரக்கனியின் கிட்னா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற படத்திலும் மஹிமா நடித்து. தற்போது இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ரத்தம் படம்:

அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ரத்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் நடிகை மகிமா நம்பி நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது ரத்தம் படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

இயக்குனர் போட்ட பதிவு:

இதற்கான படக்குழு தாய்லாந்து சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் ஷூட்டிங் டிராவலிங் நேரத்தில் நடிகை மஹிமா நம்பி சிறிது நேரம் அசந்து தூங்கி இருக்கிறார். இதை பார்த்த இயக்குனர் அமுதன் புகைப்படம் எடுத்து ரத்தம் குழுவினரின் கடின உழைப்பு என்று கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த மகிமா நம்பியின் ரசிகர்களும் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதை கவனித்த நடிகை மகிமா நம்பி இயக்குனர் ட்விடுக்கு ரிப்ளை செய்திருக்கிறார்.

மகிமா நம்பி டீவ்ட்:

அதில் அவர், அட கடவுளே! இது எனக்கு அசிங்கம். இந்த பதிவுக்கு அப்புறம் நான் இந்தியா திரும்ப விரும்பவில்லை. இது சீட்டிங். எங்கே தயாரிப்பாளரின் கடின உழைப்பு புகைப்படம்? என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியும் ட்விட் போட்டு இருக்கிறார். அதில் அவர், அவங்க ஹார்ட்ஒர்க் பண்றதை பார்க்கும்போது அப்படியே என்ன பாக்குற மாதிரியே இருக்கு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement