இயக்குனார் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘வழக்கு என் 18/9’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். மனிஷா யாதவ் 1992ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். தனது கல்லூரி காலம் முதலே மாடலாக இருந்து வந்த மனிஷா 2012ஆம் ஆண்டு வழக்கு என் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதன் பின்னர் பல தமிழ் படஙக்ளில் நடித்து வந்த இவர் ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.
வழக்கு என் 18/9 திரைப்படத்திற்கு பின்னர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம்,திரிஷா இல்லன நயன்தாரா போன்ற உள்ளிட்ட படங்களில் நடித்தார் மனிஷா.தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு முன்னணி நாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சென்னை 28 பாகம் 2 வில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
இதையும் பாருங்க : தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய விஜய் – எத்தனை கோடி தெரியுமா?
அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. ஆனால், அதன் பின்னரும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த அம்மணி ஒரு குப்பை கதை மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். பொதுவாக நடிகைகள் சிலர் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது இல்லை. ஆனால், அம்மணியோ திருமணமான அடுத்த ஆண்டே சினிமாவில் நடித்தார்.
சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அவ்வளவு ஏன் திருமணத்திற்கு பின்னர் கூட அம்மணி பிகினி புகைப்படங்களை கூட வெளியிட்டு இருக்கிறார்.அந்த வகையில்,இந்நிலையில், தற்போது நீச்சல் உடையில் போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.