காதலிக்கிறாங்களா, இல்லையாபா ? கெளதம் ஒரு பேச்சு, மஞ்சிமா ஒரு பேச்சு – திருமணம் குறித்து என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
666
manjima
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000ம் காலத்தின் தொடக்கத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். பின் 1998 ஆம் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்தார். அதுவும் இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
manjima-mohan

முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தேவராட்டம், முடிசூடா மன்னன் என சில படங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பிறகு சிறிது காலம் மஞ்சுமா மோகன் சினிமாவில் சிறிது ஒதுங்கி இருந்தார். அதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட விபத்து தான். இவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதற்காக இவர் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார்.

- Advertisement -

மஞ்சிமா மோகன் நடித்த படம்:

பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான FIR திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இதனிடையே சில மாதங்களாகவே சோஷியல் மீடியாவில் மஞ்சிமா மோகன், நடிகர் கௌதம் கார்த்திக்கும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியான.

manjima

கௌதம் கார்த்திக் பதிவிட்ட பதிவு:

இதற்கு சமீபத்தில் கூட மஞ்சிமா மோகனின் பிறந்த நாளன்று கௌதம் கார்த்திக் உறுதி செய்திருந்தார். அதில் அவர், ஒரு வலிமையான பெண் என்னுடைய வாழ்க்கையில் இணைவதை நினைத்து நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் சந்தோசமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் மஞ்சிமா மோகன் இந்த காதலை மறுத்து பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

காதல் குறித்து மஞ்சிமா மோகன் கூறியது:

அதில் அவர் கூறியிருப்பது, மூன்று வயதில் நான் சினிமாவுக்கு வந்தேன். என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களையும் மக்களிடமிருந்து மறைத்ததில்லை. எனது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்வதை விரும்புவர் நான். அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும். என் வாழ்க்கையில் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இந்த செய்தியை வெளியிட்ட அவர் என்னிடம் அதைக் கேட்டபோது நான் மறுக்கவே செய்தேன்.

வைரலாகும் மஞ்சிமா மோகன் சொன்ன கருத்து:

ஆனால், அவர் தொடர்ந்து அதை வெளியிட்டார். அது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. அதன் பின் அதை நான் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் என் பெற்றோரின் எதிர்வினை குறித்து என்னவாக இருக்கும் என்பது எனக்கு பதட்டமாக இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இப்படி மஞ்சிமா மோகன் அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் பொய்யானது என்றும் திருமணம் எதுவும் முடிவாகவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

Advertisement