லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. கோலிவுட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற விவாதத்தில் ரஜினி- விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பனிப்போர் நடந்தது. அதற்கு பின் லேடி சூப்பர் ஸ்டார் விவகாரம் புகையை தொடங்கி இருக்கிறது.
கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே நயன்தாரா தான். இது அனைவரும் அறிந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நயனிடம் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக கேள்வி கேட்டபோது, ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அந்த பட்டத்தை வைத்து தான் நிறைய விமர்சனங்கள் வருகிறது என்றெல்லாம் கூறியிருந்தார். அதே போல் மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் மஞ்சுவாரியரை தான் எல்லோருமே சொல்லுவார்கள்.
லேடி சூப்பர் ஸ்டார் சர்ச்சை:
இருந்தாலுமே, இவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவது தேவையில்லாத விவாதத்தை சோசியல் மீடியாவில் ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட முறையில் அந்த பட்டத்தை நான் அவமானமாக நினைக்கிறேன்.
மஞ்சு வாரியார் பதில் :
இந்தப் பட்டத்திற்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது. உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ரசிகர்களுடைய அன்பு ஒன்று மட்டுமே போதும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பதில் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், மலையாள மொழியில் பிரபலமான நடிகையாக மஞ்சு வாரியார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மஞ்சு வாரியார் திரைப்பயணம் :
இந்த படம் அமோக வெற்றியை பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மஞ்சு வாரியார் நடிக்கும் படங்கள் :
அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு என்ற படத்தில் மஞ்சு வாரியார் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை 2 படத்தில் நடித்து இருக்கிறார். ரஜினியின் வேட்டையன் படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து இவர் மலையாள மொழி படத்திலும் நடித்து வருகிறார்.