நயன்தாராவின் அறிய புகைப்படத்தை வெளியிட்ட அதே மேக்கப் ஆர்ட்டிஸ்ட். அடுத்த வெளியிட்ட நடிகையின் புகைப்படம்.

0
3162
nayan

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகைகளாக இருக்கும் எத்தனையோ நடிகைகள் சினிமாவில் நடிக்க வரும் முன்பு தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை நயன்தாராவும் ஒருவர். கடந்த நாட்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடிக்கும் போது எடுத்த சில புகைப்படங்களை மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அனிலா ஜோசப் என்பவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்தது பெரும் வைரலானது.

- Advertisement -

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த அனில் ஜோசப். இன்றைய அழகு கலாச்சாரத்தைப் போலல்லாமல், மிகச் சில தோல் பராமரிப்பு மற்றும் முடி தயாரிப்புகள் மட்டுமே அப்போது கிடைத்தன. நான் இந்த தொழிலுக்கு வந்தபோது, ​​எனது வாடிக்கையாளர்களுக்காக முட்டையின் வெள்ளை, பழங்கள், காய்கறிகள், அரிசி மாவு போன்றவற்றைக் கொண்டு எனது சொந்த Face maskகளை தயாரித்தேன். ஒப்பனைக்கு கூட மிகக் குறைந்த தயாரிப்புகள் மட்டுமே இங்கு கிடைத்தன & நான் அதை வெளிநாட்டிலிருந்து பெற வேண்டியிருந்தது.

திருமண ஒப்பனைக்கு நான் 500Rs தான் வசூலித்தேன் ஒரு சில சமயம் எதுவும் வசூலிக்கவில்லை என்று பதிவிட்டிருந்தார். நயன்தாராவின் அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து தற்போது மேக்கப் கலைஞரான அணிலா தற்போது அசுரன் பட புகழ் மஞ்சு வாரியாருக்கு மேக்கப் போட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை மஞ்சு வாரியார், தமிழை விட மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாவார். ஆனால், இவர் தமிழில் பிரபலமானது என்னவோ வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படம் மூலம் தான். தற்போது தமிழில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.

Advertisement