5 தலைமுறை நடிப்பு, 1500க்கு மேற்பட்ட படங்கள், பாம்பு கடித்தும், குதிரையில் இருந்து விழந்தும் நடிப்பை விடாத ஆச்சியின் ஆச்சரியமான பக்கம்.

0
1581
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த பழம் பெரும் நடிகை மனோரமா. திரையுலகினராலும், ரசிகர்களாலும் “ஆச்சி” என அழைக்கப்பட்டார். நடிகை மனோரமா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார் குடியில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் கோபி சாந்தா. சிறு வயதில் இருந்தே நாடக துறையில் இருந்தார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர். ஆரம்பத்தில் இவர் “வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து உள்ளார். மனோரமா அவர்கள் முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் தான் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

1500க்கும் மேற்பட்ட படங்கள் :

அதற்கு பின் இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார். மேலும், இவர் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் போன்ற பல விருதுகளை தன்னுடைய நடிப்புத் திறமைக்கு வாங்கி உள்ளார். இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். இதனால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. நடிகை மனோரமா தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்தியாவில் உள்ள பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவருடைய நடிப்பால் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். ஆண்களுக்கு நிகராக தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தவர் நடிகை மனோரமா என்று சொல்லலாம்.

- Advertisement -

பல மொழிகளில் பல நடிகர்களை கண்ட ஆச்சி :

இவருக்கு தமிழ் மொழி மட்டும் தான் பேச தெரியும். இருந்தாலும் நடிகை மனோரமா அவர்கள் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம் என பல மொழி படங்களில் நடித்தார். இப்படி சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், துன்பங்களையும் மனோரமா அனுபவித்து உள்ளார். இவரின் தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகம் என பல இன்னல்கள் இவருக்கு ஏற்பட்டது. இப்படி சினிமாவிலும்., மக்கள் மனதிலும் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பல இன்னல்களை சந்திக்கிறார். அதை பற்றி நாம் இங்கு பார்க்கலாம். மனோரமா சிறுவயதிலேயே வறுமையில் வாடியவர். இவருடைய அப்பா இவர்களை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

வறுமையின் பிடியில் வாழ்ந்த கோபி சாந்தா :

மனோரமாவின் அம்மா தன்னுடைய கணவரிடம் சண்டை போட்டு காரைக்குடிப் பக்கம் கோட்டையூர் அருகில் உள்ள பள்ளத்தில் குடியேறினார். அங்கு ஒரு தெரு முனையில் பலகார கடை போட்டார். சிறுவயதிலிருந்தே வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்தவர் மனோரமா. பின் தங்கள் கடையில் போடும் பலகாரங்களை வீதிவீதியாக, நாடக கம்பெனிகள், தியேட்டர்களில் எல்லாம் விற்று வருவார். விளம்பர இடைவேளையின் போதுதான் பலகாரம் விற்க முடியும். அப்போது மனோரமா கூடையை வைத்துக்கொண்டு நிற்பாராம். அதுமட்டுமில்லாமல் இவருக்கு எம்எஸ்சுப்புலட்சுமி பாடல் என்றால் மிகவும் பிடிக்குமாம். எப்போதும் அவருடைய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம்.

-விளம்பரம்-

12 வயதில் நாடகம், முதல் சிங்கள படம் :

அப்படி ஒருநாள் அவருடைய பாடல்களை தியேட்டர்க்கு வெளியே நின்று கேட்டுக் கொண்டிருக்கும் போது இவர் தன்னை மறந்து நின்று இருந்தார். அப்போது இவருடைய பலகாரக் கூடையை மாடு தின்று விட்டது. இதனால் வீட்டில் செமையாக அடி வாங்கி இருப்பதாக தன்னுடைய நண்பி சச்சினிடம் மனோரமா கூறியிருந்தாராம். அதற்கு பிறகு நடிப்பின் மீது ஆர்வம் வந்து உள்ளூர் நாடகக்குழுவில் மனோரமா சேர்ந்தார். எஸ் எஸ் ஆர் இவருடைய நடிப்பை கண்டு பிரமித்து தன்னுடைய நாடக குழுவில் சேர்த்துக் கொண்டார். 12 வயதில் இருந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய மனோரமா தன் முதல் திரைப்படத்தை சிங்கள மொழியில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படம் ‘மாலையிட்ட மங்கை’.பின் கவியரசர் கண்ணதாசன் தயாரித்த படத்திலேயே மனோரமாவை அறிமுகம் செய்து வைத்தார். பின் சென்னைக்கு வந்த மனோரமா ஆரம்பத்தில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்தாலும் அவருடைய முகபாவம் பேச்சு, நடிப்பு என எல்லோரையும் கவர்ந்தது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என அந்த காலத்தில் எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கிறார். பின் தென்னிந்திய சினிமா உலகில் முழுவதும் கொடி கட்டி பறந்தார் மனோரமா. அதுமட்டுமில்லாமல் கமல், ரஜினி, அஜித்,விஜய் என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தார். மனோரமா காமெடி வேடங்களில் மட்டுமில்லாமல் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். ஆனால், இவர் அதிகம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொதுவாகவே கதாநாயகியாக நடித்தால் பத்து வருஷம் மட்டும் தான் சினிமா தொழில் இருக்க முடியும். காமெடி நடிகையாக இருந்ததால் தான் இவர்கள் 1500க்கும் மேற்பட்ட படங்களில் ஐந்து தலைமுறைகளாக நடிக்க முடிந்தது. அது மட்டுமில்லாமல் அந்த காலத்திலேயே கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் நாடகத்தில் நடிப்பதை இவர் விடவில்லை.

அம்மா பாசம் :

தினமும் மனோரமா அவர்கள் அம்மா காலைத் தொட்டு வணங்கி விட்டு தான் சூட்டிங் கிளம்புவார். இப்படி பல நடிகர்களுடன் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். இவருடைய நடிப்பை பார்த்து முதலமைச்சர் காமராஜர் நேரில் வரவழைத்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ஒருமுறை இவர்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது பாம்பு கடித்துவிட்டது. பின் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை கொடுத்தார்கள். சிகிச்சை முடிந்த உடனே சூட்டிங்கில் கலந்து கொண்டார். அதேபோல் ஊட்டியில் நடந்த சூட்டிங்கில் குதிரையிலிருந்து கீழே விழுந்து மயங்கி விட்டார். ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். ஆனால், முழுவதாக குணம் அடைவதற்கு முன்பே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அந்த அளவிற்கு உடலுக்கு எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக்கூடாது என்று நினைப்பவர்.என்ன தான் இவர் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் இவருடைய தாய் போலவே மனோராமா தன் கணவனைப் பிரிந்து தன் ஒரே மகனை வளர்த்தார். பின் அவருடைய கணவர் வேறொரு திருமணம் செய்துகொண்டார். ஆனால், மனோரமா தன் மகனை வளர்த்து முன்னேற்ற வேண்டும் என்று போராடினார். மேலும், தன் கணவர் இறந்த சமயத்தில் அவருடைய குடும்பத்திற்கு பண உதவி கொடுத்து உதவினார். கணவன் இறந்தும் அவருடைய உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினார். மனோரமா வறுமையோடு சென்னைக்கு வந்தாலும் தன் திறமையால் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்து கோடிக்கணக்கான சொத்துக்களை சம்பாதித்தார்.

50 ஆண்டு சினிமாவில் ஆட்சி செய்த ஆச்சி :

ஆனாலும் மனதில் ஏதோ ஒரு வேதனையில் இருந்தார். மனோரமா தன்னுடைய கடைசி காலத்தில் மகனுடன் மட்டும் வாழ்ந்திருந்தார். இப்படி 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் ஆட்சி செய்தவர் மனோரமா. நடிப்பையே உயிர்மூச்சாக கருதி மரணம் அருகில் வரும் வரை தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். அதோடு அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். காமெடி, கதாநாயகி, குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ஐந்து தலைமுறையாக கொடிகட்டிப் பறந்தவர். நடிகை மனோரமாவின் இறப்பு ஒட்டு மொத்த திரையுலகையே கதிகலங்க வைத்தது. இவருடைய இறப்பு இப்போது வரை கூட யாராலுமே ஈடு கட்ட முடியாது.

Advertisement