விஜய் நடித்த அந்த படத்தின் மலையாள வெர்சனில் நான் தான் நடித்தேன் – ஆனால், விஜயுடன் அதே படத்தில் நடிக்கமுடியாம போயிடுச்சி – மீனாவின் பிளாஸ் பேக்.

0
3785
meena
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is meena.jpg

இவர் எஜமான், அவ்வை சண்முகி, சிட்டிசன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் அளவிற்கு ஹிட்டுக் கொடுத்தது.நடிகை மீனா அவர்கள் 90 காலகட்டங்களில் இருந்த முன்னணி நடிகர் எல்லாருடைய படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், தளபதி விஜய்க்கு ஜோடியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், விஜய் உடன் சாஜகான் என்ற படத்தில் ‘சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார்.

- Advertisement -

மேலும், அவருடன் நடிக்க வாய்ப்பு வந்த போதெல்லாம் எப்படி அந்த பட வாய்ப்புகள் தவறியது என்பதை கூறியுள்ளார். தளபதி விஜயுடன் நடிக்க 3 அல்லது 4 முறை வாய்ப்பு வந்த போதெல்லாம் நான் தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன்.அதனால் தான் விஜயுடன் இணைந்து நடிக்க முடியவில்லை. அதோடு தமிழில் விஜய் நடித்த “பிரண்ட்ஸ்” படம் மலையாள மொழியில் இருந்து ரீமேக் செய்தது. அதுமட்டும் இல்லாமல் மலையாளத்தில் நான் தான் நடித்தேன். ஆனால், எனக்கு டைம் கிடைக்காததனால் தமிழில் பண்ண முடியவில்லை.

மேலும், தமிழில் நான் நிறைய படங்களில் நடிக்க டேட்ஸ் இல்லாததனால் மிஸ் பண்ணியிருக்கேன். அந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கு. அதோடு அஜித் குமார் உடைய வாலி படத்தில் கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் அப்ப வேறொரு படத்தில் கமிட்டாகி இல்லாததால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement