இயக்குனரை கன்னத்தில் அறைந்த நடிகை மீனாட்சி ! கோவத்தில் இயக்குனர் செய்த செயல்

0
1592

கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மீனாட்சி. இவரது உண்மையான பெயர் பிங்கி சர்க்கார். இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 1988ஆம் ஆண்டு பிறந்தவர்.

meenakshi

இவர் தனது 18 வயதில் ஹனுமந்து என்ற தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் 2007ல் கரண் நடித்த, கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே நடித்தார். ஆனால் கருப்பசாமி குத்தகைதாரர் படத்திற்கு பிறகு அதேபோன்ற கேரக்டரில் நடிக்க அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. அந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு வித்யாசமான கதைகளை தேடினார் மீனாட்சி.

அதன்பின்னர் 2009ஆம் ஆண்டு TN 07 AL 4777 என்ற தமிழ் படத்தில் நடித்தார். விஷாலின் தோரணை படத்தில் கெஸ்ட் ரோலிலும், ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு ஹீரோயினாகவும் நடித்தார்.

actress-meenakshi

தமிழில்,கருப்பசாமி குத்தகைதாரர்,TN 07 AL 4777,ராஜாதி ராஜா,மந்திர புன்னகை,அகம் புறம், இந்த படங்களில் நடித்த பிறகு வந்த வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எம்.பி.ஏ படிக்க சென்றுவிட்டார் மீனாட்சி.

தற்போது 29 வயதான மீனாட்சி நேர் முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மீனாட்சி. படத்தின் துணை இயக்குநர் ஷங்கர் தன் நண்பர்களுடன் கை காட்டி பேசி கொண்டிருப்பதை பார்த்து, தன்னை தான் கிண்டல் செய்கிறார் என நினைத்த மீனாட்சி, சங்கரை ஓங்கி பளார் என்று அறைந்து விட்டார்.

actress Meenakshi

இதனை பார்த்த படக்குழு மீனாட்சியை கேரவனில் அடைத்து வைத்துவிட்டு, சங்கரிடம் மன்னிய கேக்க சொல்லியுள்ளனர். பின்னர் சில மணி நேரம் கழித்து வேனில் உட்கார்ந்த படியே மன்னிப்பு கடிதம் எழுதி சங்கரிடம் கொடுத்துள்ளார் மீனாட்சி. இதனால் அந்த சர்ச்சை ஓய்ந்து மீண்டும் சூட்டிங் துவங்கி உள்ளது.