மீரா ஜாஸ்மின் கேரளாவின் 1982ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். மீரா ஜாஸ்மிஸ் சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என கனவுகண்டு வந்தவர். ஆனால், சினிமாவிற்குள் வந்தது அவருக்கே ஆச்சரியமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Advertisement

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது ஊரான திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடந்த வந்தது. அதனை பார்க்க மீராவும் அவரது நண்பர்களும் சென்றிருந்தனர். அங்கு இருந்த இயக்குனர் மீரா ஜாஸ்மினின் நடவடிக்கைகளை பார்த்து, தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாயா என கேட்டுள்ளார்.

பள்ளியில் கூட ஸ்டேஜில் ஏறாத மீரா ஜாஸ்மினுக்கு அந்த வாய்ப்பு அதிர்ச்சியாக இருந்தது. சரி என்று சொல்லி, 2001ஆம் ஆண்டு சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார்.

Advertisement

Advertisement

தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். 2003ல் வந்த ‘பாடம் ஒன்னு : ஒரு விழுப்பம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் மீரா.

அதன்பின்னர் 2008ல் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா.

Advertisement