இறப்பதற்கு முன் ரெண்டு சத்தியம் வாங்கினார், ரெண்டையும் நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் – மௌனிகா சொன்ன உருக்கமான விஷயம்

0
2334
- Advertisement -

இயக்குனர் பாலு மகேந்திரா தன்னிடம் வாங்கிய சத்தியம் குறித்து நடிகை மௌனிகா அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் வெற்றி இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் பாலு மகேந்திரா. இவர் 1972 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பணி முடக்கு என்ற படத்தில் மூலம் தான் ஒளிப்பதிவாளராக சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு 1977 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதற்குப்பின் இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், இவர் சினிமாவில் இயக்குனர் மட்டும் இல்லாமல் ஒளிப்பதிவாளர், பட தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு இருந்தவர். இவருடைய திறமைக்காக இவர் பல விருதுகளை வாங்கி இருக்கிறார். கடைசியாக சசிகுமார் தயாரிப்பில் வெளியான தலைமுறைகள் என்ற படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். அதன் பின் இவர் 2014 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.

- Advertisement -

பாலு மகேந்திரா திருமணம்:

இவர் உடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இதனிடையே இவர் 1963 ஆம் ஆண்டு அகிலேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து இவர் 1978 ஆம் ஆண்டு நடிகை சோபாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகை ஷோபா 1980 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். பின் 1994 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா நடிகை மௌனிகாவை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பாலு மகேந்திரா-மௌனிகா திருமணம்:

இவர் இயக்கிய உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தின் மூலம் தான் மௌனிகா சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்குப்பின் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த யாத்ரா, ரெட்டைவால் குருவி போன்ற சில படங்களில் மௌனிகா நடித்திருந்தார். மேலும், தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய பாலு மகேந்திராவையே 1994 ஆம் ஆண்டு மௌனிகா திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே 30 வயது வித்தியாசம். இருந்தாலும், இவர்கள் 20 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

மௌனிகா திரைப்பயணம்:

தன்னுடைய கணவர் பாலு மகேந்திராவின் இறப்பிற்கு பின் மௌனிகா தனிமையில் வாழ்ந்து வந்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் கார்த்தியின் நடிப்பில் வெளியாகியிருந்த கடைக்குட்டி சிங்கம், மீண்டும் ஒரு மரியாதை, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆகா கல்யாணம் என்ற தொடரில் கோடீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

மௌனிகா செய்த சத்யம்:

இந்த நிலையில் நடிகை மௌனிகா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய கணவர் நான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நானும் சம்மதித்து சத்தியம் செய்தேன். பின் அவர் என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி சத்தியம் கேட்டார். அதற்கு நான் முடியாது என்று கூறி சத்தியம் செய்ய மறுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement