தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா.இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
நடிகை நதியா அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இவர் M குமரன் S/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மிஸ்கின் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார்.
இதையும் பாருங்க : பையா படத்தில் இதுவரை யோகி பாபுவ நோட் பண்ணியிருக்கீங்களா ? இதோ அந்த காட்சி.
தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.தமிழ் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பதில் மிஷ்கின் கைதேர்ந்தவர். அதுவும் இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் போன்ற வகைகளைத் தான் சேர்ந்தது.
அந்த வகையில் சேரன் நடிப்பில் இவர் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘யுத்தம் செய் ‘ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அன்னபூர்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது நதியா தான். இந்த படத்தில் மொட்டை அடிக்க வேண்டும் என்று மிஸ்கின் சொன்னதால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் நதியா. அதன் பின்னர் தான் இந்த படத்தில் மொட்டை தலையுடன் நடித்து நல்ல பாராட்டை பெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.