தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடின, அந்த பூரிப்பில் இவரது உடல் எடையும் கூடி கொண்டே வந்தது. இதனால் தற்போது மிகவும் உடல் எடை கூடி குண்டாக உள்ளார் யோகி.
சமீபத்தில் நடிகர் யோகி பாபு சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அவருடைய பழைய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் பார்ப்பதற்கு சற்று ஒல்லியாகவே இருக்கிறார் நடிகர் யோகி பாபு . இதனால் அந்த புகைப்படத்தில் ‘நானும் ஒல்லிதான் ஒரு காலத்துல’ என்று கிண்டலாக கேப்ஷன் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை செல்லமாக கலாய்த்தனர்.
இதையும் பாருங்க : அருள்மொழிவர்மனாவே மாறிட்டாரு – கொரோனா நிதி குறித்து கேட்ட கேள்விக்கு ஜெயம் ரவி அளித்த பதில். பாராட்டும் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமாவின் பிஸியான காமெடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு சினிமாவில் வருவதற்கு முன்னாள் ‘லொள்ளு சபா ‘ நிகழ்ச்சியில் நடித்து வந்தார். அதுபோக சில தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன் முதலாக அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ படத்தில் தான் அறிமுகமானார்.
இவரது உண்மையான பெயர் பாபு தான். இவர் யோகி படத்தில் அறிமுகமானதால் தான் இவருக்கு யோகி பாபு என்று பெயர் வந்தது. அதே போல யோகி படத்திற்கு பின்னர் இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பையா’ படத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடித்த இருப்பார். அந்த புகைப்படம் இதோ.