-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

எனக்கும் கல்யாணம், குழந்தைன்னு வாழ ஆசை தான், ஆனா- மனம் திறந்த நடிகை நக்மா

0
245

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நடிகை நக்மா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நக்மா. இவருடைய உண்மையான பெயர் நந்திதா மொராஜி. திரையில் நக்மா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை பாலிவுட்டில் தான் தொடங்கியிருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் சில படங்கள் ஹிந்தியில் நடித்துவிட்டு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த காதலன் படத்தின் மூலம் தான் நக்மா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் கார்த்திக், பிரபு தேவா, ரஜினி,நெப்போலியன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருந்தார். மேலும், தென்னிந்திய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் நக்மா இங்கேயே அதிக கவனம் செலுத்த தொடங்கி இருந்தார்.

நக்மாவின் திரைப்பயணம்:

அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் நக்மா உடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நிறைய பேசப்பட்டு இருந்தது. அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

நக்மா கடைசியாக நடித்த படம்:

-விளம்பரம்-

பின் இடைப்பட்ட காலத்தில் சினிமா வாய்ப்பை இழந்த நக்மா நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘தீனா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். பின் இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். இது தான் தமிழில் இவரின் கடைசி படம். அதன் பின்னர் நக்மா அவர்கள் போஜ்புரி படங்களில் கவனம் செலுத்தி இருந்தார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் நக்மா அரசியலில் குதித்து விட்டார்.

-விளம்பரம்-

நக்மா பேட்டி:

முதலில் இவர் பாஜகவில் அரசியலில் அங்கு அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் காங்கிரஸில் இணைந்து கொண்டார். தற்போது நீண்ட காலமாகவே இவர் காங்கிரஸியில் தான் பயணித்து வருகிறார். அதோடு இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது இவருக்கு 49 வயது ஆகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை நக்மா தன்னுடைய திருமணம் குறித்து கூறியிருந்தது, எனக்கு இப்போது 49 வயது ஆகியிருக்கிறது.

திருமணம் குறித்து சொன்னது:

திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. எனக்கும் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என்று வாழ்வதற்கு ஆசையாக தான் இருக்கிறது. சில சமயங்கள்ல நமக்கும் ஒரு துணை, குடும்பம் வேணும் என்று தோணும். அது ஏனோ இப்ப வரை கைகூட வில்லை. அப்படி ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news