திரும்பவும் அதே நிலைமை வந்ததுன்னு தினமும் அழுவேன் – விவாகரத்துக்கு பிறகு நடிகை நளினி அனுபவித்த கஷ்டங்கள்

0
113
- Advertisement -

விவாகரத்திற்கு பின் தான் பட்ட கஷ்டங்களை குறித்து மனம் திறந்து நடிகை நளினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. இவர் ராமராஜன், கார்த்தி, மோகன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய பக்தி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது இவர் வெள்ளி திரையில் குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சாமந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜனை 1987 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

நளினி-ராமராஜன் காதல்:

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் பிறந்தது. அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த ராமராஜன் நளினியை காதலித்தார். ஆரம்பத்தில் இவருடைய காதலுக்கு நளினி ஓகே சொல்லவில்லை என்றாலும் அதற்குப் பிறகு சம்மதித்தார். நளினி- ராமராஜன் காதலுக்கு நளினியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் ராமராஜனுக்கு அடி உதையெல்லாம் விழுந்திருக்கிறது. இவர்கள் இருவரும் சேரக்கூடாது என்பதற்காகவே நளினியை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்காமல் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து மலையாள படங்களில் தான் அவருடைய பெற்றோர்கள் நடிக்க வைத்திருந்தார்கள்.

நளினி-ராமராஜன் பிரிவு:

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ராமராஜன், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே நளினியை காரில் தூக்கி சென்று தாலி கட்டி திருமணம் எல்லாம் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த நளினி அம்மா,
நீ அவனுடன் வாழ மாட்டாய், எப்படியும் நீ திரும்பி வந்து விடுவாய் என்றெல்லாம் மோசமாக சாபம் விட்டிருந்தார். அதற்கு ஏற்ப ராமராஜன்- நளினியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகள் வரை தான் நீடித்தது. அதற்கு பின் இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இருந்தாலுமே ஒருவர் மீது ஒருவர் இன்னும் அதே காதலுடன் தான் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நளினி பேட்டி:

தன்னுடைய கணவர் ராமராஜனை தான் இன்னும் காதலிப்பதாக பல நிகழ்ச்சிகளில், பேட்டிகளில் நளினியே கூறி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விவாகரத்துக்கு பிறகு தான் பட்ட கஷ்டங்களை குறித்து நளினி கூறியிருந்தது, விவாகத்திற்கு பிறகு என்னுடைய குழந்தைகளை வளர்க்கவும், அவர்களுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்ய நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது அந்த சூழலில் என்னுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள எனக்கு யாருமே கிடையாது. இனி சினிமாவே வேண்டாம் என்று தான் நான் விலகி இருந்தேன்.

விவாகரத்து பின் பட்ட கஷ்டங்கள்:

என்னுடைய குழந்தைகளுக்காக நான் மீண்டும் நடிக்க வந்தேன். திரும்பவும் ஏன் இதே சூழ்நிலை எனக்கு கொடுத்தாய் என்று தினமும் நான் வணங்கும் கருமாரி அம்மனிடம் முறையிட்டு அழுதெல்லாம் இருந்தேன்.
நான் இப்போது இருக்கும் இந்த நிலைமைக்கு அந்த கருமாரியம்மன் தான் காரணம் என்றெல்லாம் கூறியிருக்கிறார். பொதுவாகவே நளினி ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையும் அதிகப்பற்றும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement