ஐயா படத்தில் நயனுக்கு முன் நடிக்க வேண்டியது இந்த நடிகை தானாம் – இன்னிக்கி அட்ரஸ்ஸே இல்ல. (இவங்களும் கேரளா நடிகை தான்)

0
9127
nayan

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.ஐயா படத்தின்போது இயக்குனர் ஹரி ஒரு குடும்ப பாங்கான முகத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் பிஆர்ஓ ஜான்சனிடம் கதாநாயகி தேர்வு குறித்து கூறி இருக்கிறார். அப்போது ஜான்சன் அவருடைய கேரளாவைச் சேர்ந்த நண்பர் அஜய் என்பவரிடம் கூறியிருக்கிறார்.

இதையும் பாருங்க : போட்டியாளர்களை எதிர்காலத்த பத்தி நீங்க கவலபடுறீங்களா ? பாலாஜிக்கு சனம் ஷெட்டி கொடுத்த நெத்தியடி பதில்.

- Advertisement -

கேரள பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை செய்த அஜய் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த நயன்தாராவின் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதன்பின்னர்தான் நயன்தாராவிற்கு ஐயா படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், நயந்தாராவிற்கு முன்பாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார் பிரபல நடிகை நவ்யா நாயர். நடிகை நவ்யா நாயர் தமிழில் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நவ்யா நாயர், ஐயா படத்தில் சரத் குமாருக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்கள். ஆனால், அப்போது நான் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் அந்த படத்தில் நடிக்கவில்லை இதே போல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் கூறியுள்ளார் நவ்யா நாயர்.

-விளம்பரம்-
Advertisement