என்ன, ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு – நயன், நிவேதா-வை பார்த்து குழம்பி போன ரசிகர்கள். காரணம் இதான்.

0
13344
nayan
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது இவர் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாக இதை ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகிறார்கள். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழிகளிலும் இவர் படு பிஸியாக நடித்து வருகிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இறுதியாக இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திலும் இவர் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தான் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இவர் பிரபு தேவா நடித்து வரும் பொன் மாணிக்கவேல் படத்திலும், வெங்கட் பிரபு நடித்து வரும் பார்ட்டி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் பல வருடங்களாக லேட் ஆகி வருகிறது.

இதை தவிர அம்மணிக்கு பெரிய அளவில் தமிழில் வாய்ப்புகள் ஏதும் கைவசம் இல்லை. இந்நிலையில், நயன்தாரா.. நிவேதா பெத்துராஜ் இருவரும் ஒரே மாதிரியான உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது என்ன ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு என்று குழம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement