இது Engagement ரிங் – நயன் சொன்ன அந்த மோதிரம் இதானா ? அன்னிக்கே விக்கி இந்த போஸ்ட்ல போட்டு இருக்காரே.

0
5549
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவான் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம். அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : பேரனை காப்பாத்த வீட்டையும் வித்தாச்சி, இப்போ மூனு மாசம் வாடக கூட கொடுக்கல. கர்ணன் பாடகி கண்ணீர்.

- Advertisement -

அந்த லவ் நல்லா இருக்கிறது. அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, தனக்கு விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளதாக கூறியுள்ளார். நயன்தாரா நடிப்பில் இன்னும் சில நாளில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார் நயன்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. நயன்தாராவிடம், கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் நயன்தாரா,அவரது கையில் அணிந்திருக்கும் மோதிரம் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். ஒருவேளை இதுதான் அந்த நிச்சயதார்த்த மோதிரமோ

-விளம்பரம்-
Advertisement