பேரனை காப்பாத்த வீட்டையும் வித்தாச்சி, இப்போ மூனு மாசம் வாடக கூட கொடுக்கல. கர்ணன் பாடகி கண்ணீர்.

0
2787
karnan
- Advertisement -

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் இடம்பெற்ற கர்ணன் பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பாடலை அழகிய நாட்டுப்புற தொடரில் பாடிய மாரியம்மாள் யார் என்பது பலரும் அறிந்திராத விஷயம். சிவகங்கை மாவட்டம் திட்டக்குடி என்ற கிராமத்தில் பிறந்ததால் இவரது பெயர் கிடாக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறது. மதுரை ராம்ஜி ஆடியோ உடன் இணைந்து மாரியம்மாள் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் இவர் வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரைசம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் இதற்கு முன்னர் பாடி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-23.png

மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்த லட்சுமி இவருடைய மகள் தான். இத்தனை வருடங்கள் பல பாடல்களை பாடினாலும் கர்ணன் படத்தின் மூலம்தான் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று இருக்கிறார் இதனால் தன்னுடைய 50 வருட கனவு நிறைவேறி விட்டதாக நெகழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் மாரியம்மாள்.

இதையும் பாருங்க : இங்க வாய்பின்றது அவ்ளோ சீக்கிரம் கெடச்சிட்ரதில்லை – நிஜ வாழ்க்கையிலும் இவர் நிலை இதானாம்.

- Advertisement -

மாரியம்மாள் பல ஆண்டுக்கு முன்னரே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருடன் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், மகளின் கணவரும் சில வருடங்களிலேயே காலம் ஆகி இருக்கிறார். ஒற்றையாக இருந்து தனது மகள் பேரன்கள் என்று பலரையும் மாரியம்மாள் தான் காப்பாற்றி வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்த சில மாதங்களிலேயே இவரது பேரனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

சிகிச்சைக்காக சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கி அவருக்கு சிகிச்சை பார்த்து வந்திருக்கிறார்கள். கர்ணன் படம் வெளியாகி இவருக்கு பாராட்டும் புகழும் கிடைத்த விட தனக்கு மேலும் பட வாய்ப்புகள் கிடைத்து விடும் தன்னுடைய பேரனை காப்பாற்றி விடலாம் என்று ஆசைப்பட்டு உள்ளார். அதே போல இவருக்கு தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கொரோனா பிரச்சினை காரணமாக இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் அப்படியே கிடப்பில் போய் விட்டது.

-விளம்பரம்-

நான் பிழைப்பேநா பாட்டி ? என்று தன்னிடம் தன்னுடைய பேரன் கேட்டு அழுவதை தாங்க முடியவில்லை என்று மனம் உருகி கூறியுள்ளார். பேரனின் சிகிச்சைக்காக கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து விட்டு சொந்தமாக இருந்த வீட்டையும் விற்று விட்டார்கள். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும்கூறியுள்ளார்.

மேலும், நிதி நெருக்கடியால் மூன்று மாதங்கள் வாடகை கூட கொடுக்க வில்லை என்றும் கூறியுள்ளார் மாரியம்மாள். இன்னும் எத்தனை கஷ்டங்களை தான் நான் தாங்குவேன், முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என் பேரனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கய்யா என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் மாரியம்மாள்

Advertisement