இதனால் தான் என் சம்பளத்தை உயர்த்தினேன்..!விளக்கமளித்த நடிகை நயன்..!

0
232
nayanthara

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் தயாரிப்பாளர் ராஜன் தமிழ் நடிகர்களை பற்றியும்,இயக்குனர்களை பற்றியும் பல விமர்சனங்களை வைத்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்று பேசிய அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் ,அஜித் போன்றவர்கள் மீதுவிமர்சனங்களை வைத்திருந்தார்.

kolamavu

இந்நிலையில் தமிழ் சினிமாவின் லைடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல கோடிகளில் சம்பளம் வாங்குகின்றார் என்பது ஊரறிந்த ஒன்று தான். அதே போல அம்மணி நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட் ஆகிவிடுகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை நயன்தாரா இதுவரை ரூ.4 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர், `கோலமாவு கோகிலா’ படத்துக்குப்பின் தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கேட்டால்,”கோலமாவு கோகிலா’ படம் ரூ.12 கோடி வசூல் செய்து இருக்கிறது. அந்த படத்துடன் வந்த ஒரு பெரிய கதாநாயகனின் படம் ரூ.9 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது. எனவே என் சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி உயர்த்தியதில், எந்த தவறும் இல்லை” என்று கூறுகிறாராம் நயன்.