இரட்டை வேடத்தில் அசத்தப்போகும் நயன் ..! மீண்டும் ஹாரர் கதையில் கலக்க வருகிறார்..!

0
1820
- Advertisement -

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது. ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் இப்படத்தை ‘லக்‌ஷ்மி’,’மா’ குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். “ஐரா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

Nayanthara-iyra

- Advertisement -

மாயா, டோரா படங்களைப் போன்று இப்படம் ஹாரர் அட்வெஞ்சர் ஜானரில் தயாராகவுள்ளது. அஜித், விஜய் படங்களுக்குப் பெயர் வைக்கும் முன்னர் ஹேஷ்டேக்குகள் #தல58, #தளபதி62 எனப் ட்ரெண்ட் ஆவது போல #Nayan63 என்ற ஹேஷ்டே சமூக வலைதளங்களில் படக்குழு சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.

நயன்தாரா இப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கலக்கிய யோகி பாபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நயன்தாராவின் தோழியாக”தர்மதுரை” படத்தில் நடித்த திருநங்கை ஜீவா நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தை “அறம்” படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இப்படத்துக்கு ஜோகேஷ் கார்த்திக் படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது.

Advertisement