தடுப்பூசி போடாமல் போஸ் கொடுக்கிறார் என்று கேலி செய்த பலர் – புதிய புகைப்படத்தை வெளியிட்டு வாயை அடைத்த நயன்தாரா.

0
2008
nayan
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .

-விளம்பரம்-

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கனா பட இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து கொரோனா தொற்றால் காலமானார்.

இதையும் பாருங்க : மோடியின் புகைப்படத்திற்கு முன் சரியாக 12 மணிக்கு தனது மகளுடன் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஆர் கே சுரேஷ்.

- Advertisement -

அதே போல அதே தினத்தில் காலா, அசுரன் பட நடிகர் நிதிஷ் வீராவும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் ஷிவனுடன் சேர்ந்து செண்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (மே 18) கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

அதே போல நயன்தாராவின் இந்த புகைப்படம் மீம் கிரியேட்டர்களின் கேலிக்கு உள்ளாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தடுப்பூசி இல்லாமல் சும்மா போஸ் கொடுத்துள்ளார் என்று பலரும் கேலி செய்து வருவது தான். இப்படி ஒரு நிலையில் நயன்தாரா தடுப்பூசி தெரியும்படி மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுளளார்.

Advertisement