மாடல் அழகியாக இருந்த போது பிகினி உடையில் ramp walk செய்துள்ள நிதி அகர்வால்.

0
12999
- Advertisement -

தமிழ் சினிமாவிற்கு வரும் முன்பே ரசிகர் பட்டாளம் பெற்ற பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு வரும் முன்பே தெலுங்கு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நிதி அகர்வால். நடிகை நித்தி அகர்வால் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் பெறவில்லை.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் நடித்தார் நிதி அகர்வால். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நிதி அகர்வாலுக்கும் இந்தப் படம் மிகப் பெரிய பூஸ்ட் அப் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து நிதி அகர்வால் அவர்கள் தமிழில் காலடி தடம் பதித்து இருந்தார். தற்போது நடிகை நிதி அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு உள்ளார்.

இதையும் பாருங்க : சன்னி லியோனை தொடர்ந்து திரிஷா போட்ட சைக்கிள் பதிவு வைரல் (இவங்களாலே பெட்ரோல் போட முடியலயா)

- Advertisement -

இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதே போல சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் நடித்து இருந்தார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அம்மணிக்கு தெலுங்கில் மவுசு குறையாமல் தான் இருந்து வருகிறது. சமீபத்தில் இவரது ரசிகர்கள் இவருக்கு கோவில் கூட கட்டி இருந்தனர்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதே போல மாடல் அழகி என்பதால் பிகினி பற்றி சொல்லவா வேண்டும். இவர் மாடல் அழகியாக இருந்த போது பிகினி உடையில் கேட் வால்க் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து தான் கோவில் கட்டி இருப்பார்களோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement