சன்னி லியோனை தொடர்ந்து திரிஷா போட்ட சைக்கிள் பதிவு வைரல் (இவங்களாலே பெட்ரோல் போட முடியலயா)

0
1204
trisha
- Advertisement -

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் சைக்கிளுடன் ஃபோட்டோ போடுவது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முதன் முறையாக இந்தியாவில் பெட்ரோல் 102 ரூபாயை கடந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பெட்ரோல் விலை வியர்வை கண்டித்து பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்.

-விளம்பரம்-

சைக்கிள் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது, சிக்கனமாது. இதன்மூலம் உடல் வலிமை பெறுவதுடன், எந்த நோயும் நம்மை தாக்காது என்று பலரும் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பிரபல ஆபாச நடிகையான சன்னி லியோன் பெட்ரோல் விலை உயர்வை கேலி செய்யும் விதமாக தனது சமூக வலைதளத்தில் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “இது ரூ.100 ஐ தாண்டிவிட்டால் உங்கள் உடல்நலனை காத்து கொள்வது அவசியம். சைக்கிள் ஓட்டுவது நலம்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : ‘பீஸ்ட்’ போஸ்டரில் ஸ்கோப்பை கேலி செய்த அஜித் ரசிகர்கள் – வலிமை போஸ்டரை கூகுள் போட்டோ என்று ஆதாரத்தை பகிரும் விஜய் ரசிகர்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தென்னந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் திரிஷாவும் சமீபத்தில் சைக்கிள் ஒன்றை வாங்கி இருக்கிறார்.  சைக்கிள் ஒன்றை ஓட்ட தயாரான நிலையில், ”நல்ல மனநிலையில் இருந்து ஒரு சவாரி, இது என்னோட புதிய விஷயம்” எனக் குறிப்பிட்டு அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். திரிஷாவின் இந்த பதிவை பார்த்த பலர் பெட்ரோல் உயர்வால் தான் திரிஷா இப்படி பதிவிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்.

ஒரு சிலரோ உங்களுக்கே பெட்ரோல் போட காசு இல்லையா என்று கூறி வருகின்றனர். நடிகை திரிஷா, பிட்னஸ்ஸிற்கு மிகவும் முக்கியவதும் கொடுப்பவர். இத்தனை வயது ஆனாலும் தொடர்ந்து உடற் பயிற்சிகள் மற்றும் யோகா மூலம் தனது உடலை மிகவும் பிட்டாக வைத்து வருகிறார். ஆனால், திடீரென்று சைக்கிளை பிட்னசுடன் ஒப்பிட்டு திரிஷா போட்டுள்ள பதிவு பெட்ரோல் விலையை குறிப்பிடும் சூசக பதிவாக தான் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement