மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள் – கடுப்பான நிதி. (சிம்பு கூட நடிச்சாலே இப்படி ஆகிடுமோ ? )

0
87705
nidhi
- Advertisement -

தமிழ் சினிமாவிற்கு வரும் முன்பே ரசிகர் பட்டாளம் பெற்ற பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு வரும் முன்பே தெலுங்கு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நிதி அகர்வால். நடிகை நித்தி அகர்வால் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் பெறவில்லை.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் நடித்தார் நிதி அகர்வால். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நிதி அகர்வாலுக்கும் இந்தப் படம் மிகப் பெரிய பூஸ்ட் அப் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து நிதி அகர்வால் அவர்கள் தமிழில் காலடி தடம் பதித்து இருந்தார். தற்போது நடிகை நிதி அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு உள்ளார்.

இதையும் பாருங்க : பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சந்திக்க சென்றுள்ள கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய் – என்ன காரணம் தெரியுமா ?

- Advertisement -

இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதே போல சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் நடித்து இருந்தார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அம்மணிக்கு தெலுங்கில் மவுசு குறையாமல் தான் இருந்து வருகிறது. சமீபத்தில் இவரது ரசிகர்கள் இவருக்கு கோவில் கூட கட்டி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.இதனால் கோபமடைந்த நிதி அகர்வால், இதுகுறித்து கூறியதாவது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை பார்க்கிறேன். அந்த புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement