பீஸ்ட் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ள கார்த்தியை கண்டு அசந்து போய்யுள்ள விஜய்.

0
18874
karthi

விஜய் நடித்து வரும் பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விஜய்யை நேரில் சந்திக்க சென்றுள்ள கார்த்தியை விஜய் கண்டுகொள்ளாமல் இருந்த சுவாரசியமான காரணம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. 

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் சதா வெளியிட்ட புகைப்படம் – இப்பவும் அப்படியே நச்சுனு இருக்காங்களே.

- Advertisement -

இதே இடத்தில் தான் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தி, சர்தார் படத்துக்காக போடப்பட்ட முதியவர் கெட்-அப் உடன் விஜய்யின் பீஸ்ட் செட்டிற்கு சென்று இருக்கிறார். கார்த்தி வயதான கெட்டப்பில் இருந்ததால் அவரை யாரும் முதலில் வேறு யாரோ என்று கண்டுகொள்ளவில்லை.

இதனால் சில நிமிடங்கள் ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார் கார்த்தி. பின்னர் நடிகர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த வியந்து போன நடிகர் விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று சொன்னாராம். பின்னர் இருவரும் நலம் விசாரித்தனர்.“உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்” என்று கார்த்தியை பாராட்டினாராம் விஜய்.

-விளம்பரம்-

Advertisement