தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நிரோஷா. இவர் எம் ஆர் ராதா அவர்களின் மகளாவார். இவருடன் பிறந்தவர்கள் அனைவருமே தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் தான். அதோடு 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதாவின் தங்கை தான் நடிகை நிரோஷா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.பின்னர் இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நிரோஷா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, இப்ப நடிக்கிற கதாநாயகிகள் பாதிப்பேர் மக்களுக்கு தெரிவதில்லை. படம் ரிலீஸ் ஆனாலும் தெரிய மாட்டேங்குது. படம் ரிலீசாகி ஓடினாலும் மக்கள் மத்தியில் தெரிய மாட்டேங்குது. அதோடு அவர்கள் அந்த படத்தில் இருந்தார்களா? என்றே தெரிவதில்லை. ஆனால், டிவி அப்படி கிடையாது. சினிமாவிற்கு சமமாக தற்போது டிவி சீரியல்கள் வந்து விட்டது. அந்த அளவிற்கு டிவி தொடர்கள் மக்களிடம் நெருக்கமாக ஆகிவிட்டது. பக்கத்து வீட்டு பெண்ணாகவே டிவியில் நடிக்கும் நடிகைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதையும் பாருங்க : ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.
படங்களில் நடித்த நடிகர்கள் நடிகைகள் எல்லாம் சீரியலில் நடிக்க ஆரம்பித்த உடன் அவர்களை சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களாகவே பார்க்கா ஆரம்பித்து விட்டார்கள். தற்போது சினிமாவை விட சீரியல் நடிகர்களுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலம். ஆனால், தற்போது இருக்கும் நடிகைகள் அந்த மாதிரி கிடையாது. அவர்கள் எல்லாம் டிவியா என்று ஏளனமாக நினைக்கிறார்கள். டிவி தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்று அவர்களுக்கு தெரிய மாட்டேங்குது.
டிவியோட பவர் தற்போதிருக்கும் நடிகர்களுக்கு தெரிய வில்லை. எங்க அக்கா ராதிகாவை பாத்தீங்கன்னா, சினிமாவில் இருக்கும் அளவிற்கு சீரியலிலும் அவர்களுக்கு அதிக பிரபலம் இருக்கிறது. எங்க அக்கா ரொம்ப ஸ்ட்ரிட். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தோம். அதுல ஒரு காட்சி பாத்தீங்கன்னா ஐஸ்கிரீம் வந்து ஒரே டேக்கில் எடுக்கணும். நான் அதை எடுத்து எதுத்து பார்த்துட்டு எனக்கு வரவில்லை. உடனே நான் போயி என் அக்கா கிட்ட என்னால் எடுக்க முடியலைன்னு சொன்னேன். அவங்க என்ன பார்த்து என்ன dashக்கு நடிக்க வந்திருக்கன்னு கேட்டாங்க. எனக்கு அப்ப பயங்கர கோபம். உடனே வந்து ஒரே டேக்கில் அதை எடுத்து கரெக்டா ஓகே ஆயிடுச்சு. அந்தளவிற்கு என் அக்கா டெடிகேஷன், பர்பெக்ஷன், எதா இருந்தாலும் சரியா செஞ்சு முடிக்க வேண்டும் என்ற டெடிகேஷன். இருந்தாலும் ரொம்ப டென்ஷன் என்று கூறினார்.