அஜித் 59 படத்தில் நடிக்க பிடிக்கவில்லை.!பிரபல நடிகை ஷாக்.!காரணம் இது தானம்.!

By Rajkumar · 18/1/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடாதா என்று பல நடிகைகளும் ஏங்கிக்கொண்டிருக்க அஜித்தின் 59வது படத்தில் விருப்பம் இல்லாமல் தான் ஒப்புக்கொண்டதாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து 125 கோடி வசூல் சாதனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்க : தல 59 படத்தில் ஒப்புக்கொண்டது இதனால் தான்..!முதன் முறையாக வாய் திறந்த ரங்காராஜ் பாண்டே..!

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது வித்யா பாலன் 'அஜித் 59' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வித்யா பாலன், பொதுவாக ரீ-மேக் படங்களில் நடிக்கஎனக்கு விருப்பம் இருந்தது இல்லை, முதலில் படத்தில் நடிக்க முடியாது என்று தான் கூறினேன்.ஆனால் அதன் பின் போனி கபூர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full