அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் படத்திற்கு போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று அனைவருக்கும் தெரியும்.
ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். மேலும், இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் அமிதாப் நடித்த ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க : இதுவரை வெளிவராத தல அஜித் மனைவி ஷாலினி மேடையில் பாடிய பாடல்.! வைரலாகும் வீடியோ..!
பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் ஒரு வழக்கறிஞ்சராக நடித்திருப்பார். அவருடன் மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆத்விக் மற்றும் நஸ்ரியா கமிட் ஆகியுள்ளனர். மேலும் , பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார்.
சமீபத்தில் பிரபல தனியார் இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள ரங்கராஜ் பாண்டே, தல 59 படத்தில் நடிப்பதை உறுதிசெய்தார். மேலும், அந்த பேட்டியில் வினோத் குமார் என்னுடைய நல்ல நண்பர் அவர் என்னிடம் படத்தில் நடிப்பது குறித்து கேட்டார் நானும் சம்மதித்தேன் என்று கூறியுள்ளார்.