என் காதல் தோல்விக்கு காரணம் இதுதான் – மனம் திறந்து தங்கலான் பட நடிகை பார்வதி சொன்ன விஷயம்

0
164
- Advertisement -

தன்னுடைய காதல் தோல்வி குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை பார்வதி திருவோத்து அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்ந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த பூ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து இவர் மரியான், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

பார்வதி குறித்த தகவல்:

இதை அடுத்து இவர் மலையாளம் மொழியில் தான் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். அதிலும் இவர் பெண்ணுரிமை, அரசியல், சமத்துவம் போன்ற துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு பல விருதுகளும் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட இவர் 15 வருடங்களுக்கு மேலாக நடித்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடித்து இருந்தார்.

பார்வதி திரைப்பயணம்:

கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பார்வதி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பார்வதி அவர்கள் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து கூறியிருந்தது, நான் டேட்டிங் ஆப்பில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன். அடிக்கடி அதில் நல்ல பசங்கள் இருக்கிறார்களா? என்று தேடிப்பார்ப்பேன். ஆனால், இது போன்ற டேட்டிங் ஆப்பில் காதல் செய்வதில் எனக்கு விருப்பம் விருப்பமில்லை. ஒருவரை காதலிப்பதற்கு முன்பு அவரைப் பற்றி நன்கு தெரிந்து ஒருவரை ஒருவர் சந்தித்து பழகி தானாக நடக்கும் காதல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய சினிமா துறையிலேயே நல்ல பையன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றும்.

காதல் தோல்வி:

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பையனை காதலித்தேன். எனக்கு இருக்கும் ஒரே பிரச்சினை முன்கோபம் தான். சின்ன விஷயங்களுக்கு கூட நான் பயங்கரமாக கோவப்படுவேன். அதனால் தான் என்னுடைய காதல் முறிந்தது. ரொம்ப நாள் கழித்து நான் மீண்டும் அந்த பையனை சந்தித்தேன். நாங்கள் இருவரும் தற்போதுநல்ல நண்பர்களாக இருக்கிறோம். இனி ஒரு காதலில் விழ வேண்டாம் என்று ஒருவேளை காதலில் விழ வேண்டும் என்றால் அந்த முடிவை சரியாக எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement