முஸ்லீம்களின் புனித பண்டிகைளில் ஒன்றாக கருதப்படும் பக்ரீத் பண்டிகையான இன்று (ஜூலை 21) Peta அமைப்பை வம்பிழுத்து உள்ளார் கோ பட நடிகை பியா பாஜ்பாய். தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் பரிட்சயமானார். கோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கித்தில் வெளியான கோவா படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இவர் நடித்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படத்திலும் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு Peta அமைப்பை மறைமுகமாக கலாய்த்து உள்ளார்.

இதையும் பாருங்க : 14 வருடங்களுக்கு முன் விஜய்யின் பேச்சை கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து பார்த்துள்ள விஜய் சேதுபதி. (பக்கத்துல இந்த நடிகர்)

Advertisement

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பாக இருந்து வரும் Peta அமைப்பு விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பு என்று சொல்லி வந்தாலும் விலங்குகளை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று இந்து பண்டிகைகளை மட்டுமே குறிவைத்து தாக்கி வரும் PETA அமைப்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதிலும் தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்று ஜல்லிக்கட்டை தடை செய்ய வைத்தது இந்த அமைப்பு.

இதனாலேயே பெரும்பாலான தமிழர்கள் இந்த அமைப்பு எதிரானவர்களாக மாறினார்கள். இப்படி ஒரு நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நடிகை பியா, peta அமைப்பின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து காலை வணக்கத்தை தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த பதிவை பார்த்த பலரும் peta அமைப்பை கேலி செய்ய தொடங்கிவிட்டனர்.

Advertisement

அதில் ட்விட்டர்வாசி ஒருவர், peta இன்று தூங்கி கொண்டு இருக்கும் என்றும் பதிவிட்டு இருந்தார். மேலும், ஒரு சிலரோ இந்துக்களின் பண்டிகைக்கு மட்டும் தான் இவர்கள் கண்ணுக்கு தெரியும் என்று கூறி வந்தனர். இதற்க்கு பதில் அளித்த Peta அமைப்பு, peta அமைப்பு தினமும் மிருகங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுத்து கொண்டு தான் இருக்கிறது. அது தியாகம் செய்யப்படும் விலங்குகளாக இருந்தாலும் சரி. எங்களுடன்சேர்ந்து நீங்களும் இதற்கு ஒரு தீர்வை காணுங்கள் என்று பதில் அளித்துள்ளது.

Advertisement
Advertisement