தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.
வீடியோவில் 40 : 15 நிமிடத்தில் பார்க்கவும்
இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். அந்த அளவிற்கு அவருடைய எதார்த்தமான நடிப்பும், கதைகளும் உள்ளது. ஆனால், கடந்த சில காலமாக இவரது நடிப்பில் வெளியான எந்த படமும் கைகொடுக்கவில்லை. இருப்பினும் கை நிறைய படங்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி ஆரம்பத்தில் கூத்து பட்டறையில் இருந்து வந்தார். அதன் பின்னர் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவரது பமுகம் அறியப்பட்டது என்னவோ புதுப்பேட்டை படத்தில் தான். இந்த நிலையில் புதுப்பேட்டை சமயத்தில் விஜய் சேதுபதி 9 ரூபாய் நோட்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருந்தார்.அந்த வீடியோவில் இளைய தளபதி விஜய் மேடையில் பேச அதனை ஒரு பார்வையாளராக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. அதில் அவருக்கு அருகில் அட்டகத்தி தினேஷ் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது. அன்று விஜய்யின் பேச்சை வேடிக்கை பார்த்த அதே விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து இருந்தார்.