வைதேகி காத்திருந்தாள் படத்தின் கதாநாயகியின் மகள் குறித்த விவரத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வைதேகி காத்திருந்தாள். இந்த படத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில், பரிமளம், கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் வைதேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பிரமிளா ஜோஷை.
இவர் கன்னட திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர். ஆனால், தமிழில் இவர் வைதேகி காத்திருந்தால் என்ற படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டார். அதற்கு பிறகு இவர் பெரிதாக தமிழில் நடிக்கவில்லை என்றாலும் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவருடைய மகள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க நடிகை மேக்னா ராஜ் தான்.
மேக்னா திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் மேக்னா ராஜ். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இதனிடையே நடிகை மேக்னா ராஜ் அவர்கள் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். அதோடு சிரஞ்சீவி சர்ஜா அவர்கள் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி சர்ஜா -மேக்னா திருமணம்:
திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து இருந்தார். அதேபோல் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா 22 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை.
சிரஞ்சீவி சர்ஜா மரணம்:
அநியாயமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். அப்போது இவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அப்போது மேக்னா தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார். தன் முதல் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். சர்ஜாவின் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. பலரும் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருந்தார்கள்.
மேக்னா மற்றும் அம்மாவின் புகைப்படம்:
மேலும், சர்ஜா பிரிவில் சோகத்தில் இருந்த மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டப்பட்டது. தற்போது மேக்னா ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் மேக்னா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் இத்தன நாள் இது தெரியாம போச்சே! என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.