கருப்பா இருக்க, குண்டா இருக்கனு கேலி பண்றாங்க – வருத்தத்தோடு பிரியா மணி சொன்ன விளக்கம்.

0
1494
priyamani
- Advertisement -

சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் பலரும் திருமணம் முடிந்தாலே உடல் அமைப்பை பெரிதாக கண்டுகொள்வது இல்லை. திருமணத்திற்கு முன் படு ஸ்லிம்மாக இருக்கும் பல நடிகைகள் திருமணம் முடிந்த பின்னர் படு பருமனாக மாறிவிடுகின்றனர். அந்த வகையில் பிரியா மணியும் ஒருவர். திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் பிரியாமணி. 2002 ஆம் ஆண்டு ‘எவரே அதகாடு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

தொடர்ந்து நடித்து வந்த பிரியா மணி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் பிரியாமணி திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் உடல் எடை கூடி இருந்தார். ஆனால், மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் வெப் தொடரில் நடித்துள்ள இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் பேசிய பிரியாமணி :-

- Advertisement -

நான் சினிமாவுக்கு வந்த புதிதில் கடினமாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறினேன். திருமணத்திற்கு பின்னரும் கணவர் உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க முடிந்தது. சொல்லப்போனால் திருமணத்திற்கு பின்னர் தான் அதிக வாய்ப்புகள் வருகிறது. திருமணமான காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கின்றனர். அதேபோல சீனியர் நடிகையான நயன்தாராவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல கதைகளில் நடிக்கிறார்.

சினிமாவில் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற வித்தியாசம் சினிமாவில் கிடையாது. எனக்கு வயதாகிவிட்டது, குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் போன்ற பல்வேறு விமர்சனங்கள் வருகின்றது. அப்படி பேசுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. யாரையும் எப்படி தரம் தாழ்த்தி பேச வேண்டாம், கருப்பும் ஒரு அழகு தான்’ என்று கூறியுள்ளார் பிரியாமணி

-விளம்பரம்-
Advertisement