விஜய் சேதுபதி குறித்து நடிகை பிரியாராமன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஐந்தாவது வாரம் முடிந்து 40 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். மேலும், போன வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள்.
பிரியராமன் பேட்டி:
இதில் நடிகர் ரஞ்சித், தன்னுடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர் என்பதை பற்றி எமோஷனலாக பேசியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பிரியா ராமன், பிக் பாஸ் வீட்டில் ரஞ்சித் சொன்னது உண்மைதான்.
எங்களுடைய மகன் ஆதித்யாவை நாங்கள் பிரச்சினையாகவே பார்க்கவில்லை. நான் ஆதித்யா அம்மா என்பதில் எனக்கு ரொம்ப பெருமை. இந்த மாதிரியான ஒரு குழந்தையை வீட்டில் வளர்ப்பது சவாலான விஷயம்.
தன் மகன் குறித்து சொன்னது:
ஆதித்யாவுக்கு ஆட்டிசம் என்று சொன்னபோது எனக்கு பலர் ஆறுதல் சொல்லி புலம்பி இருந்தார்கள். இதனால் நானுமே வருத்தப்பட்டு அழுதெல்லாம் இருந்தேன். பின் இதுதான் என்று நான் அக்செப்ட் பண்ணி கொண்டு பல விஷயங்களை புரிந்து கொண்டேன். கடவுள் என்னை நம்பி அந்த குழந்தையை கொடுத்திருக்கிறார். என் மேல கடவுளுக்கு அவ்ளோ நம்பிக்கை இருக்கு என்று தோணுச்சு. ஆட்டிசம் உள்ள பிள்ளைகளுக்கு எமோஷனல் புரியாது என்று சொல்வார்கள். ஆனால், ஆதித்யா அப்படி கிடையாது. அதோடு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் பார்ப்பார்கள் என்ற ஒரு பார்வையும் இருக்கு. இந்த கொடூரமான சமூகம் அவர்களை கேலி செய்கிறார்கள்.
ரஞ்சித் குறித்து சொன்னது:
அதற்காகத்தான் நான் என் மகனை வெளியில் காட்ட வில்லை. ஆதித்யா ரொம்ப சந்தோஷமா இருக்கிறான். இப்ப ரஞ்சித்தும் ஆதித்யாவை மிஸ் பண்ணுவாரு. ஆதித்யாவும் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறான். ரஞ்சித் பிக் பாஸ் வீட்டுக்குள் பேசுவதற்கு முன்னாடி ஆதித்யா கிட்ட வீடியோ காலில் பேசி ரெக்கார்ட் பண்ணி வீட்டில் வைத்து இருக்கிறோம். அதை அவனுக்கு போட்டு காண்பிக்கிறோம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி பற்றி சொன்னது:
சமீபத்தில் ரஞ்சித் ஜெஃப்ரி மாறி நடித்திருந்தார். அச்சு அசலாக அவர் அப்படியே ஜெப்ரி மாதிரியே தான் நடித்தார். அதோடு இப்ப சொல்லப்போனால் ரொம்பவே சேப் கேம் விஜய் சேதுபதி தான் விளையாடுகிறார். கடந்த வாரம் மொட்டை கடுதாசி யாருக்கு வேணும்னு கருத்துக்கள் கேட்டிருந்தார்கள். அவருக்கு தான் மொட்ட கடுதாசி தேவைப்படுது. உண்மை அதுதான். அவர்தான் பெண்கள் அணிக்கு மொட்டை கடுதாசி போடுற மாதிரி தான் பண்றாரு. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். இருந்தாலும், சொல்ல வேண்டிய நேரத்தில் கருத்துக்களை சொல்ல வேண்டி ஆகணும் என்று கூறி இருக்கிறார்.